கடந்த தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயன் பெறும் வகையில் மடிக்கணினி அல்லது டேப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது.
8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்புத் திறன், 14 அல்லது 15.6 திரை , ப்ளூடூத் உள்ளிட்ட பல் அம்சங்களைக் கொண்ட தரமான மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும், இந்த அம்சங்கள் மடிக்கணினிகளில் இடம்பெறவேண்டும் என்றும் டெண்டரில் கூறப்பட்டிருந்தது.
அதன்படி சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்கள் சார்பில் இதற்கான டெண்டர் தொகையை சமர்பித்தன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்கான திட்டத்தில் குறைந்த தொகை சமர்பித்துள்ள Dell, Acer ஆகிய நிறுவனங்கள் தேர்வு செயப்பட்டுள்ளன.
15.6 இன்ச் திரை அளவு கொண்ட ஒரு மடிக்கணினிக்கு Dell நிறுவனம் வரிகள் இல்லாமல் 40,828 ரூபாயையும், 14 இன்ச் திரை அளவு கொண்ட ஒரு மடிக்கணினிக்கு Acer நிறுவனம் வரிகள் இல்லாமல் 23,385 ரூபாயையும் விலையாக சமர்பித்துள்ள நிலையில், அந்த நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.