தமிழ்நாடு

Uber App-ல் மெட்ரோ ரயில் டிக்கெட் : முழு தகவல் இதோ உங்களுக்காக!

Uber App-ல் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Uber App-ல் மெட்ரோ ரயில் டிக்கெட் : முழு தகவல் இதோ உங்களுக்காக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) உடன் இணைந்து ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) நிறுவனமானது, அதன் ஊபர் செயலியின் மூலமாக சென்னை மெட்ரோ ரயில் பயண டிக்கெட்டுகளை பெறுவதை அறிமுகப்படுத்துவதாக ஊபர் இன்று அறிவித்துள்ளது.

இன்று முதல், சென்னையில் உள்ள ஊபர் பயனர்கள் தங்கள் மெட்ரோ பயணங்களைத் திட்டமிடலாம், QR- அடிப்படையிலான டிக்கெட்டுகளை வாங்கலாம் மற்றும் நிகழ்நேர போக்குவரத்துத் தகவல்களை பெற முடியும். இதற்கான வசதிகளை உபர் செயலி அறிவித்துள்ளது. இந்த செயல்பாடு ONDC இன் இயங்கக்கூடிய நெட்வொர்க் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது ஊபரைப் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்புடன் இணைக்கிறது.

அதோடு, சென்னையில் உள்ள பயணிகள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மெட்ரோ டிக்கெட்டுகளில் 50% தள்ளுபடியைப் பெற முடியும். கூடுதலாக, இணைக்கப்பட்ட பயணத்தை எளிதாக்குவதற்காக, சென்னையில் உள்ள மெட்ரோ நிலையங்களில் தொடங்கும் அல்லது முடிக்கும் சவாரிகளுக்கு ஊபர் ஆட்டோ மற்றும் உபர் மோட்டோ இரண்டிலும் ரூ.20 வரை 50% தள்ளுபடியை ஊபர் வழங்குகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் மாதம் முழுவதும் செல்லுபடியாகும்.

இந்த ஒருங்கிணைப்பு, சென்னைக்கான ஊபரின் விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாகும். நகரத்தில் ஊபரின் சிறப்புமிக்க செயல்பாடுகளுக்கு ஒரு சான்றாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லிக்குப் பிறகு, ஊபர் செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் இந்தியாவின் இரண்டாவது நகரம் சென்னை மட்டுமே.

banner

Related Stories

Related Stories