தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 2,538 இளைஞர்களுக்கு அரசுப்பணி நியமனம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாட்டில் 2,538 இளைஞர்களுக்கு அரசுப்பணி நியமனம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (6.8.2025) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், உதவி பொறியாளர் (திட்டமிடல்), இளநிலைப் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி மேற்பார்வையாளர், நகர திட்டமிடல் ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டமிடல்), பணி ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 2538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துதல், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், நகர்ப்புர வசிப்பிடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட பாதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம், சாலை மேம்பாட்டுப் பணிகள்,  நகர்ப்புர ஏழைகளுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை  நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படுகின்ற நகராட்சி நிருவாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல்;

தமிழ்நாட்டில் 2,538 இளைஞர்களுக்கு அரசுப்பணி நியமனம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

கழிவு நீரகற்று வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள உதவி பொறியாளர், உதவி பொறியாளர் (திட்டமிடல்), இளநிலைப் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி மேற்பார்வையாளர், நகர திட்டமிடல் ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டமிடல்), பணி ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகிய பணியிடங்களை நிரப்பிட 2.2.2024 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், அண்ணா பல்கலைகழகம் மூலமாக 29.06.2024, 30.06.2024 மற்றும் 06.07.2024 ஆகிய நாட்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு கல்வித் தகுதிக்கான பதவிகளுக்குரிய எழுத்துத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்பட்டு 20.09.2024 அன்று நேர்முகத் தேர்விற்குத் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 7.10.2024 முதல் 17.02.2025 வரை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு 17.02.2025 அன்று தேர்வாளர்கள் பெற்ற மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய 1,12,955 நபர்களில் 6,606 நபர்கள் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன.

இக்காலிப் பணியிடங்களை நிரப்பிட 6,606 நபர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இனசுழற்சி முறையில் 6,606 நபர்களுக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பாணை அனுப்பப்பட்டது. 28.02.2025 முதல் 02.04.2025 வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு மதிப்பெண் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் இறுதியாக 2,538 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

மேற்படி தேர்வு செய்யப்பட்ட நபர்கள் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படுகின்ற நகராட்சி நிருவாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் இன்றையதினம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories