தமிழ்நாட்டில் உள்ள நிலுவையில் உள்ள 898 இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் வசிப்பவர்களின் திருமணங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அயலக தமிழர் மற்றும் மறுவாழ்வுதுறை சார்பில் பதிவுத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் வசிப்பவர்களின் திருமணங்களை பதிவு செய்வது தொடர்பாக அனைத்து சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
இதன்படி, விண்ணப்பித்துள்ள 898 இலங்கை தமிழர் தம்பதிகளின் விண்ணப்பங்களை சரிபார்த்து, அவர்களுக்கு முன்னூரிமை அளித்து திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மணமக்கள் இரு வேறு மதமாக இருப்பின் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அறிவிப்பு வெளியிட்டு காலம் முடிந்த ஆவணங்களை பரிசீலனை செய்து திருமணத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த வகையான திருணமங்கள் பதிவு செய்ய சம்பந்தபட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை 26ம் தேதி செயல்பாட்டில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை மண்டலத்தில் 76, சேலம் மண்டலத்தில் 128, வேலூர் மண்டலத்தில் 185, திருச்சியில் 79, நெல்லையில் 149, கோவையில் 114, ராமநாதபுரத்தில் 167 என்று மொத்தம் 898 நிலுவையில் உள்ள திருமணங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.