தமிழ்நாடு

1 மணி நேரம் வராத புறநகர் மின்சார ரயில்... ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் : சென்னையில் நடந்தது என்ன ?

1 மணி நேரம் வராத புறநகர் மின்சார ரயில்... ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் : சென்னையில் நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கம் வழியாக செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் சுமார் 1 மணி நேரம் வராத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், விம்கோ நகரில் பயணிகள் இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

ஆனால் ரயில்வே அதிகாரிகள் முறையான பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் ஒன்றரை மணி நேரம் கழித்து ரயில் வந்த போது அதனை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1 மணி நேரம் வராத புறநகர் மின்சார ரயில்... ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் : சென்னையில் நடந்தது என்ன ?

அதனைத் தொடர்ந்து திருவெற்றியூர் ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் வருவது தாமதமானதாக ரயில்வே அதிகாரிகள் விளக்கமளித்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பயணிகளுடன் ரயில்வே ஊழியர்களும் போலீசாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தெற்கு ரயில்வேக்கு தொடர்புடைய புறநகர் மின்சார ரயில்களின் சேவை இதுபோன்ற காரணங்களால் சமீபத்திய நாட்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories