தமிழ்நாடு

திருவாரூரில் உள்ள ‘சமூகநீதி விடுதி’க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு!

திருவாரூர் மாவட்டம், கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.

திருவாரூரில் உள்ள ‘சமூகநீதி விடுதி’க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

திருவாரூர் மாவட்டம், கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தற்கால இளம் சந்ததியினர் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து, எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை, சமத்துவச் சமுதாயமாகக் கட்டமைத்திட, பல்வேறு சாதி சமயப் பிரிவுகளின் பெயர்களின்கீழ் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதன்படி பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை ‘சமூகநீதி விடுதிகள்’ என்று பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.7.2025 அன்று உத்தரவிட்டார்.

திருவாரூரில் உள்ள ‘சமூகநீதி விடுதி’க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு!

“சமூகநீதி விடுதி” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதையொட்டி, அதனை பார்வையிடும் நோக்கில், முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் (10.7.2025) அரசு விழா நடைபெறும் திருவாரூர், எஸ்.எஸ். நகர் செல்லும் வழியில், கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதிகளுக்கு நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சமூகநீதி விடுதியில் உள்ள நூலகம், சமையலறை உணவருந்தும் அறை, பொருள் இருப்பு அறை ஆகியவற்றை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், விடுதியில் உள்ள மாணவ, மாணவியர்களிடம் அவர்களின் தேவைகள், விடுதியில் உள்ள வசதிகள், வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவை குறித்தும், உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், வார்டன்கள் பணிக்கு வருவது குறித்தும் கேட்டறிந்தார்.

அத்துடன் சமையலறைக்கு சென்று உணவு தயாரிக்கும் பணியாளர்களிடம், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்து, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories