தமிழ்நாடு

5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூரில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் மாவட்டத்தில், கும்பகோணம்-திருவாரூர் சாலையில், பவித்திரமாணிக்கத்தில் தொடங்கி தூர்காலயா ரோடு வழியாக தெப்பக்குளம் தெற்குவீதி, பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக 5 கி.மீ., தூரம் நடைபயணம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அப்பொழுது, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை கண்ட பொதுமக்கள் இன்முகத்துடன் வரவேற்றார்கள்.

பெண்கள், பொதுமக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பார்வையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருவாரூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் சிலையினை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

banner

Related Stories

Related Stories