தமிழ்நாடு

நிலத்தடி நீருக்கு வரி - ”விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சும் ஒன்றிய அரசு” : பேரவை தலைவர் அப்பாவு எதிர்ப்பு!

விவசாயிகளை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

நிலத்தடி நீருக்கு வரி - ”விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சும் ஒன்றிய அரசு” : பேரவை தலைவர் அப்பாவு எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவை குறித்த சிறப்பு முகாம் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்கார்ட் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு," விவசாயத்துறையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பல்வேறு எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த எந்திரங்களை எப்படி பயன்படுத்துவது பராமரிப்பது என்பது குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய பா.ஜ.க அரசு விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தற்போது விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு நடைமுறை படுத்த முன்வந்துள்ளது. நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

ஒன்றிய அரசின் இந்த முடிவால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். 140 கோடி மக்களுக்கு தங்களது ரத்தத்தை உணவாக வழங்கும் விவசாயிகளின் ரத்தத்தை ஒன்றிய அரசு உறிஞ்சப் பார்க்கிறது. இந்த திட்டத்தை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும், கண்டிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories