தமிழ்நாடு

காவல்துறையினருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு! : சுதந்திர நாளில் விருதுபெறுவோர் பட்டியல் உள்ளே!

2025-ம் ஆண்டு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை.

காவல்துறையினருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு! : சுதந்திர நாளில் விருதுபெறுவோர் பட்டியல் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் துறை அதிகாரிகள்/பணியாளர்களுக்கு “போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்” 2023-லிருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் அவர்கள் 22.04.2025 அன்று சட்டமன்றத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கோரிக்கையில் பதக்கங்களின் எண்ணிக்கை 5-லிருந்து 15-ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து G.O.Ms.No.263 உள் (மி.க)த் துறை நாள் 06.06.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில், காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துரைக்கேற்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்கண்ட காவல் அதிகாரிகள் / ஆளிநர்களுக்கு பதக்கம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்:-

வ.எண். பெயர், பதவி மற்றும் பணிபுரியும் இடம்

திரு/திருமதி

1. ஆஷிஷ் ராவத், இ.கா.ப.,

காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை மாவட்டம்.

2. அ. மாரிமுத்து,

காவல் ஆய்வாளர், மேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலகு, மதுரை மாவட்டம்.

3. மா.வசந்தகுமார்,

காவல் ஆய்வாளர், பெருமாநல்லூர் காவல் நிலையம், திருப்பூர் மாவட்டம்.

4. நே. ராஜாசிங்,

காவல் ஆய்வாளர், நுண்ணறிவு பிரிவு, சென்னை பெருநகர காவல்.

5. சௌ. ராதாகிருஷ்ணன்,

காவல் ஆய்வாளர், ஆர்-3 அசோக்நகர் சட்ட ஒழுங்கு காவல் நிலையம், தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல்துறை.

6. எம்.சி. ரமேஷ்,

காவல் ஆய்வாளர், அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஆவடி காவல் ஆணையரகம்.

7. க. பாபு சுரேஷ் குமார்,

காவல் ஆய்வாளர், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு, சேலம் அலகு.

8. த. அன்பரசி,

காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, சென்னை.

9. சு. இரமேஷ்,

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்-558, அமலாக்கப்பணியகம், தலைமையகம், சென்னை.

10. ந. தனபாலன்,

காவல் உதவி ஆய்வாளர், D 3 போத்தனூர் சட்டம் ஓழுங்கு காவல் நிலையம், கோயம்புத்தூர் மாநகரம்.

11. ம.இரணியன்,

காவல் உதவி ஆய்வாளர், வலிவலம் காவல் நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம்.

12. க. கதிரேசன்,

காவல் உதவி ஆய்வாளர், குமுளி காவல் நிலையம், தேனி மாவட்டம்.

13. செ. குருசாமி,

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்-121, சென்ட்ரல் இருப்புப்பாதை காவல், சென்னை.

காவல்துறையினருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு! : சுதந்திர நாளில் விருதுபெறுவோர் பட்டியல் உள்ளே!

14. எம்.சுசீந்திரன்,

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்-3580, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு, திண்டுக்கல்.

15. சி.முருகன்,

காவல் ஆய்வாளர், கடுமையான குற்றங்கள் விசாரணைப் பிரிவு, மதுரை மாநகரம்.

மேற்கண்ட விருது பெறுபவர்களின் சிறப்புப் பணிகள் பின்வருமாறு:-

1. ஆஷிஷ் ராவத், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரிந்த போது, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1031 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 373 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசா, ஆந்திரா வழியாக தமிழகம் மற்றும் இறுதியாக இலங்கைக்கு (GOATS வழித்தடம்) முழு வலையமைப்பும் கண்காணிக்கப்பட்டு வரைபடமாக்கப்பட்டது. முந்தைய குற்றவாளிகள், முக்கிய நபர்களின் வலையமைப்பு மற்றும் செயல்பாட்டு முறை பகுப்பாய்வு செய்யப்பட்டது.

2. அ.மாரிமுத்து, காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, மேலூர், மதுரை, சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்வது குறித்து புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, பல்வேறு வழக்குகளில் 733 கிலோ கஞ்சாவை முழுவதுமாகக் கைப்பற்றியுள்ளார். மேலும் NCB-யின் ரகசியத் தகவலின்படி, ஆந்திராவிலிருந்து இரண்டு கார்களில் கடத்தப்பட்ட 123 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மதுரையில் உள்ள NCB-யிடம் ஒப்படைத்தார்.

3. மா.வசந்தகுமார், காவல் ஆய்வாளர், பெருமாநல்லூர் காவல் நிலையம், திருப்பூர் மாவட்டம், பல்வேறு வழக்குகளில் 39.8 கிலோ கஞ்சா மற்றும் 2.5 கிலோ குட்கா பொருட்களை முழுமையாக பறிமுதல் செய்துள்ளார். மேலும், புகையிலை/போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்தி பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தியுள்ளார்.

4. நே.ராஜா சிங், காவல் ஆய்வாளர், நுண்ணறிவுப் பிரிவு, சென்னை பெருநகர காவல், 32 வழக்குகளில் தொடர்புடைய 92.45 கிலோ கஞ்சா மற்றும் 25.159 கிலோ மெத்தம்பேட்டமைனை முழுமையாகக் கைப்பற்றி, 88 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளார். இவர் சிறப்புக் குழுவுடன் சேர்ந்து, 38 கிலோ கெட்டமைன் மற்றும் 1.5 கிலோ மெத்தம்பேட்டமைன் கைப்பற்றியுள்ளார். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சிட்லபாக்கம் ராஜாவை விசாரித்து, இலங்கை போதைப்பொருள் வலையமைப்பான கஞ்சி பானி இம்ரான் (ரஷ்யா) மற்றும் சின்னா (கனடா) உடனான தொடர்பை அம்பலப்படுத்தினார்.

5. சௌ.ராதா கிருஷ்ணன், காவல் ஆய்வாளர், அசோக் நகர் காவல் நிலையம், தி. நகர் மாவட்டம், சென்னை பெருநகர காவல், போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அவர் மேற்கொண்ட உறுதியான முயற்சிகள் மூலம் குறிப்பிடத்தக்க போதைப் பொருட்களின் பறிமுதல் மற்றும் குற்றவாளிகளை கைது செய்வதற்கு காரணமாக இருந்தது. மொத்தத்தில், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட பல்வேறு குற்றவாளிகளிடமிருந்து 6.45 கிலோ கஞ்சா மற்றும் 72.63 கிராம் மெத்தம்பேட்டமைனை அவர் பறிமுதல் செய்துள்ளார்.

காவல்துறையினருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு! : சுதந்திர நாளில் விருதுபெறுவோர் பட்டியல் உள்ளே!

6. எம்.சி.ரமேஷ், காவல் ஆய்வாளர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, அம்பத்தூர், 41 கஞ்சா வழக்குகளைப் பதிவு செய்து 288 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து 4 குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார். குட்கா விநியோகம் மற்றும் விற்பனையை தீவிரமாக கண்காணித்த இவர், 06.01.2025 அன்று நசரேத்பேட்டையில் 5.5 டன் குட்காவைப் பறிமுதல் செய்து 3 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளார்.

7. க.பாபு சுரேஷ் குமார், காவல் ஆய்வாளர், போதைப் பொருள் புலனாய்வுப் பணியகம் சிஐடி பிரிவு, சேலம், இவர் 95 வழக்குகளைப் பதிவு செய்து 1195.950 கிலோ கஞ்சா மற்றும் 2.050 கிலோ ஹாஷிஷ் எண்ணெயைக் கைப்பற்றி, சம்பந்தப்பட்ட 79 குற்றவாளிகளை கைது செய்துள்ளார். தலைமறைவான 3 விசாரணைக் குற்றவாளிகளை அவர் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். ஜீவானந்தம், ரஞ்சித் மற்றும் இளையரசு ஆகிய 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

8. த.அன்பரசி, காவல் ஆய்வாளர், மத்திய புலனாய்வுப் பிரிவு, சென்னை மண்டலம், மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் பற்றிய ரகசிய தகவல்களைச் சேகரித்து, சட்டவிரோத கஞ்சா மற்றும் எல்.எஸ்.டி, மெத்தம்பேட்டமைன் போன்ற செயற்கை போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளார். பல்வேறு வழக்குகளில், அவர் 1013 கிலோ கஞ்சா, 4677 போலி வெளிநாட்டு மதுபான பாட்டில்கள், 857 வெளிநாடு மற்றும் 8134 தமிழக மதுபான பாட்டில்களை கைப்பற்றியுள்ளார்.

9. சு.ரமேஷ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்-558, குற்றப்பிரிவு தலைமையகம், சென்னையை சார்ந்த இவர் மேம்பட்ட முறையில் கணினி தரவு பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மூலம், போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் களப்பணியில் உள்ள அதிகாரிகள்/குழுக்களுக்கு முக்கிய தகவல்களை சரியான நேரத்தில் பகிர்ந்து கொண்டதால் தலைமறைவான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10. ந.தனபாலன், உதவி ஆய்வாளர், போத்தனூர் காவல் நிலையம், கோயம்புத்தூர் நகரம். போதைப் பொருள் குற்றவாளிகள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதிலும், பெரும்பாலும் ரகசியமாகப் பணியாற்றுவதிலும், குற்றவாளிகளின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார். 55 வழக்குகளில் புலனாய்வு அதிகாரிகளுக்கு உதவியதோடு, 169 குற்றவாளிகளைக் கைது செய்யவும், 161.498 கிலோ கஞ்சா, 77 கிராம் மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்ய உதவியுள்ளார். மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் 23 குற்றவாளிகளை கைது செய்ய புலனாய்வு அதிகாரிக்கு உதவியாகவும் இருந்துள்ளார்.

11. ம.இரனியன், காவல் உதவி ஆய்வாளர், வலிவலம் காவல் நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி மற்றும் திருக்கண்ணபுரம் காவல் நிலையங்களில் பணியாற்றிய காலத்தில், சட்டவிரோத கஞ்சா, குட்கா மற்றும் மதுபான விற்பனையை தடுத்து நிறுத்தியுள்ளார், மேலும், சட்டவிரோத மதுபானம் தொடர்பாக அதிக வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். இவரது தலைமையிலான குற்றக் குழு, நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 74.800 கிலோ கஞ்சா, ஒரு கண்டெய்னர் லாரியைப் பறிமுதல் செய்து 23 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது.

12. க.கதிரேசன், உதவி ஆய்வாளர், குமுளி காவல் நிலையம், தேனி மாவட்டம், தென் மண்டல போதைப்பொருள் தடுப்புப் பணிக் குழுவில் பணியாற்றிய காலத்தில், ஆந்திராவில் மூன்று நடவடிக்கைகளை மேற்கொண்டு, கஞ்சா விற்பனை செய்த/கடத்திய நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். மொத்தமாக இக்குழுவினர் 1646 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து 69 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். மேலும், இவர் சின்னமனூர் பகுதிகளில் இளைஞர்களுக்கு இந்த மருந்து ஊசியை விற்பனை செய்த 14 குற்றவாளிகளை கைது செய்து மெஃபெர்டெர்மைன்-சல்பேட்-இன்ஜெக்ஷன் ஐபியின் 98 குப்பிகளை பறிமுதல் செய்துள்ளார்.

13. செ.குருசாமி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்-121, மத்திய ரயில்வே காவல் நிலையம், சென்னை விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பணியகம் சிஐடி-ல் பணியாற்றியபோது, 48 குற்றவாளிகளைப் பிடித்து அவர்களிடமிருந்து 239 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளார். 2024-ல் 100 குற்றவாளிகளைப் பிடித்து 632.700 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் கடத்தல் பொருட்கள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு முன் ஆஜர்படுத்தப்பட்டு 88 வழக்குகள் பதிவு செய்யதுள்ளார்.

14. எம்.சுசீந்திரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்-3580, போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகம் சிஐடி பிரிவு , திண்டுக்கல், போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகம் சிஐடி பிரிவு-ல் நீதிமன்றப் பணியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, 5 UI வழக்குகள், 11 NTF வழக்குகள் மற்றும் 225 PT வழக்குகள் அதிக அளவில் நிலுவையில் இருந்தன. இவர் எடுத்த நடவடிக்கைகளினால், 16 குற்றவாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் 124 வழக்குகள் முடிவடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும், அவரது முயற்சியால் 49 வழக்குகளில் தண்டனை பெற காரணமாக இருந்துள்ளார்.

15. சி.முருகன், காவல் ஆய்வாளர், தீவிர குற்றப் பிரிவு, மதுரை மாநகரம், தனது பணிக்காலத்தில், ரவுடித்தனம், சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்த பல சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இது தவிர, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், மதுரை மாநகரில் 3927 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவைப் பறிமுதல் செய்வதிலும், 100க்கும் மேற்பட்ட NDPS சட்ட வழக்குகளைப் பதிவு செய்ய உறுதுணையாக இருந்துள்ளார்.

இந்த விருதுகள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2025 சுதந்திரதின விழாவில் வழங்கப்படும்.

banner

Related Stories

Related Stories