முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.6.2025) வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் அடையாளமாக 12 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
அதன்படி, ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ், வருவாய் நிலையாணை எண்.21(6)-ன்படி கிராம நத்தமாக வகைபாடு மாற்றம் செய்து வழங்கப்பட்ட பட்டா – 2074, அரசாணை நிலை எண் 318-ன்படி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா (நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகள் தவிர) – 1330;
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் கிரையம் பெற்றவர்களுக்கு உட்பிரிவு செய்து வழங்கப்பட்ட பட்டா – 10,000, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கிரையம் பெற்றவர்களுக்கு உட்பிவு செய்து வழங்கப்பட்ட பட்டா – 212, அரசாணை நிலை எண் 612-ன்படி, சர்க்கார் மனை வகைபாட்டிலிருந்து இரயத்துமனைகளாக மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்ட பட்டா – 240, ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பட்டா வழங்கப்பட்டு தற்போது இணையவழியில் வழங்கப்பட்ட பட்டா – 4,525;
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் பட்டா வழங்கப்பட்டு தற்போது இணையவழியில் வழங்கப்பட்ட பட்டா – 1,473, அரசாணை நிலை எண் 97-ன்படி, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வரன்முறை செய்து வழங்கப்பட்ட பட்டா – 1922, என மொத்தம் 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இணையவழி பட்டா மற்றும் நத்தம் வகைபாடு உள்ளிட்ட அனைத்து இனங்களில் 18,035 பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்ட 21,776 பட்டாக்களையும் சேர்த்து மொத்தம் 39,811 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.