சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தகை வழங்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா, பசுமை பரப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு, அரசு புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்ட, 4,832 கோடி ரூபாய் மதிப்பிலான, 118 ஏக்கர் நிலம், தோட்டக்கலைத் துறையிடம், நில மாற்ற முறையில் ஒப்படைக்கப்பட்டது.
நகரமயமாக்கல், பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, கிண்டியில் மிகப்பெரிய பரப்பளவில் இந்தப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதை செயல்படுத்தும் விதமாக, கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்ட 118 ஏக்கரில் பிரமாண்ட பசுமை பூங்கா அமைக்க விரிவான திட்ட அறிக்கை மற்றும் வடிவமைப்பு தயார் செய்ய தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை டெண்டர் கோரி உள்ளது.
இந்த பசுமை பூங்காவில், பல்வேறு வண்ணங்களில் மலர் படுகைகள், மலர் சுரங்கப்பாதை, பல்வேறு வகையான தோட்டங்கள், கண்ணாடி மாளிகை, பறவைகள் இடம், வண்ணத்துபூச்சி தோட்டம் உள்ளிட்ட 25 வகையான வசதிகள் உருவாக்கப்பட உள்ளது.