தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, பல திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை பாராட்டி, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு,
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சாலை வசதிகள் மிக மிக முக்கியமாகும். அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த ஜான் எப். கென்னடி அவர்கள், “அமெரிக்க நாட்டுப் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்நாட்டின் பயன்படும் சாலை வசதிகள் சிறப்பாக அமைந்திருப்பதே காரணம்” என்று ஒருமுறை குறிப்பிட்டாராம்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திடும் நோக்கில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் சாலை வசதிகளைப் பெருக்கிட இணைப்புச் சாலைத் திட்டம். தமிழ்நாடு அரசின்கீழ் தனித்துறையாக நெடுஞ்சாலைத் துறை, நெடுஞ்சாலைத் துறைக்கெனத் தனி அமைச்சர் முதலிய பலவற்றை உருவாக்கி, நெடுஞ்சாலைத்துறையில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் எனப் புகழ்பெறச் செய்தார்.
முதலமைச்சர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையின் முத்திரைகள் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம்
2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3,858 கோடி மதிப்பீட்டில் 448 கி.மீ. நீளமுள்ள நான்கு வழித்தட சாலைகள், ரூ.2,207 கோடி மதிப்பில் 1,681 கி.மீ. நீளமுள்ள இரு வழித் தட சாலைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன தொடர்ந்து ரூ.2,807 கோடி மதிப்பீட்டில் 383 கி.மீ. நீளமுள்ள நான்கு வழித்தட சாலைப் பணிகளும், ரூ.709 கோடி மதிப்பீட்டில் 357 கி.மீ. நீளமுள்ள இரு வழித்தட சாலைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்
ரூ.17,154 கோடி மதிப்பீட்டில் 9,620 கி.மீ நீளமுள்ள சாலைப் பணிகள் மற்றும் ரூ.1,161 கோடி மதிப்பீட்டில் 996 பாலம் / சிறு பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ரூ.731 கோடி மதிப்பில் 164 கி.மீ. நீளத்திற்கு நகர்ப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
ரூ.2,074 கோடி மதிப்பீட்டில் சாலை ஓடுதளப்பாதை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6,805 கி.மீ. நீளச் சாலைகளில் ஓடுதளப் பரப்பினை மேம்படுத்தும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.662 கோடி மதிப்பீட்டில் 1,652 சாலைப் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன.
புறவழிச்சாலை / இணைப்புச் சாலைகள்
ரூ.307.8 கோடி மதிப்பீட்டில் மண்ணச்சநல்லூர் (கட்டம் 1) இலுப்பூர், பார்த்திபனூர், ராசிபுரம் கட்டம் 1 பிரிவு-2, திருத்துறைப்பூண்டி கட்டம்-1 பவானி கட்டம் II, முதுகளத்தூர், திருத்தணி, குன்னூர் மற்றும் நாமக்கல் கட்டம் I ஆகிய பத்து புறவழிச்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ரூ.20.85 கோடி மதிப்பிட்டில் ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி வழியாக திண்டல் சந்திப்பிலிருந்து கனிராவுத்தர்குளம் செல்லும் சாலை, ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் ஜவான்ஸ் பவன் சாலை, ரூ.41.89 கோடி மதிப்பீட்டில் பசுமலையில் இணைப்புச்சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ரூ.4,907.17 கோடி மதிப்பீட்டில் 5,064.53 கி.மீ நீளமுள்ள ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
ரூ.1,330.70 கோடி பன்னாட்டு நிதி உதவியுடன் கூடிய திட்டங்கள்
சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ரூ.240.06 கோடி மதிப்பீட்டில் நக்கசேலம், குரும்பலூர் புறவழிச்சாலைகளுடன் கூடிய துறையூர் பெரம்பலூர் சாலை, ரூ.349.94 கோடி மதிப்பீட்டில் மோகனூர் நாமக்கல். சேந்தமங்கலம் ராசிபுரம் சாலை, ரூ.251.29 கோடி மதிப்பீட்டில் விருத்தாச்சலம் உளுந்தூர்பேட்டை சாலை, ரூ.238.90 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் - மன்னார்குடி சாலை, ரூ.250.51 கோடி மதிப்பீட்டில் மேலூர் திருப்பத்தூர் சாலை ஆகிய 5 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சாலை மேம்பாடுத் திட்டம்-II
இத்திட்டத்தின் கீழ் ரூ.129.94 கோடி மதிப்பீட்டில் விருத்தாச்சலம் பரங்கிப்பேட்டை சாலை ரூ. 144.64 கோடி மதிப்பீட்டில் ஓமலூர் மேச்சேரி சாலை. ரூ.104.70 கோடி மதிப்பீட்டில் சித்தோடு ஈரோடு சாலை, ரூ.176.58 கோடி மதிப்பீட்டில் திருநெல்வேலி செங்கோட்டை கொல்லம் சாலை ஆகிய 4 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆறு வழித்தடச் சாலையாக மேம்பாடு தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் கீழ், வண்டலூர்.வாலாஜாபாத் சாலை நான்கு வழித் தடத்திலிருந்து ஆறு வழித் தடச் சாலையாகரூ. 180.09 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.1,372 கோடி மதிப்பீட்டில் 1049 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
அவற்றுள் முக்கியமானவை:
ரூ.17.04 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை மாவட்டம், தண்டரை எரையூர் சாலை, செய்யாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்,
ரூ.90.96 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கல்லணையில் உயர்மட்டப் பாலம்!
ரூ.27.92 கோடி மதிப்பீட்டில் பெண்ணையாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்.
ரூ.58.64 கோடி மதிப்பீட்டில் சென்னையில், திருவொற்றியூர்- பொன்னேரி-பஞ்செட்டி சாலையில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே உயர்மட்டப் பாலம்.
ரூ.21.56 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காஞ்சிபுரம் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்.
ரூ.33.76 கோடி மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டம் கீழ்பவானி கால்வாயின் குறுக்கே 8 உயர்மட்டப் பாலங்கள்.
ரூ.18.57 கோடி மதிப்பீட்டில் திருத்தணி-நாகலாபுரம் சாலையில் கொசத்தலையாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்.
ரூ.19.48 கோடி மதிப்பீட்டில் பருத்திப்பட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்.
ரூ.11.06 கோடி மதிப்பீட்டில் காலகம் ஆவுடையார்கோவில் சாலையில் மருதங்குடி ஆற்றின் குறுக்கே உயர் மட்டப் பாலம்.
ரூ.13.60 கோடி மதிப்பீட்டில் மன்னார்குடி-சேதுபாவசத்திரம் சாலையில் மகாராஜா சமுத்திரம் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்.
ரூ.19.00 கோடி மதிப்பீட்டில் மன்னடிமங்கலம் மற்றும் இரும்பாடி இடையில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்.
ரூ.36.50 கோடி மதிப்பீட்டில் சித்தூர்- திருத்தணி சாலையில் உயர்மட்டப்பாலம் முதலிய தரைமட்டப் பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாகக் கட்டப்பட்டுள்ளன.
நபார்டு கடனுதவி மற்றும் மாநில நிதியுதவி திட்டத்தின் கீழ் நபார்டு அலகின் மூலம் ரூ1137.62 கோடி மதிப்பீட்டில் 278 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
ரூ.813.25 கோடியில் 8 சாலை மேம்பாலங்கள்:
ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலையில் காளியம்மன் கோயில் தெரு மற்றும் சென்னை புறநகரப் பேருந்து நுழைவு வாயில் சந்திப்பில் மேம்பாலம்!
ரூ.67.00 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி- விஜயநகரம் சந்திப்பில் தரமணி இணைப்புச் சாலையிலிருந்து வேளச்சேரி புறவழிச்சாலை செல்லும் இரண்டாம் அடுக்கு பாலப்பகுதிப் பணி மற்றும் ரூ.78.49 கோடி மதிப்பில் வேளச்சேரி புறவழிச்சாலையிலிருந்து வேளச்சேரி- தாம்பரம் சாலையை இணைக்கும் முதல் அடுக்கு பாலப்பகுதிப் பணி!
ரூ.95.21 கோடி மதிப்பீட்டில் மேடவாக்கம் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் பாலப்பகுதி.
ரூ.53.12 கோடி மதிப்பீட்டில் மதுரை- தொண்டி சாலை மற்றும் மதுரை சுற்றுச் சாலை சந்திப்பு பல்வழிச்சாலையில் மேம்பாலம்.
ரூ.20 கோடியில் சென்னையில் இந்திரா நகர் சந்திப்பில் 'U' வடிவிலான மேம்பாலம்!
ரூ.140.49 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர்- உக்கடம் ஆத்துப்பாலத்தில் சாலை மேம்பாலம் மற்றும் ரூ.265.44 கோடி மதிப்பில் உக்கடம்- ஆத்துப்பாலம் நீட்சிப்பணி ஆகிய சாலை மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
ரூ.1134.01 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 29 இரயில்வே மேம்பாலங்கள்/ இரயில்வே கீழ்பாலங்கள்
ரூ.52.98 கோடி மதிப்பீட்டில் அன்னனூர் அருகில் இரயில்வே மேம்பாலம்.
ரூ25.74 கோடி மதிப்பீட்டில் கடம்பத்தூர் இரயில் நிலையம் அருகில் கடம்பத்தூர்- திருவாலங்காடு இரயில் நிலையங்களுக்கிடையில் இரயில்வே மேம்பாலம்.
சென்னை-பொன்னேரிக்கரை காஞ்சிபுரம் சாலையில் ரூ.59.63 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் இரயில் நிலையம் அருகில் இரயில்வே மேம்பாலம்.
ரூ.37.12 கோடி மதிப்பீட்டில் ஊரப்பாக்கம் அருகில் வண்டலூர் கூடுவாஞ்சேரி இரயில் நிலையங்களுக்கு இடையில் இரயில்வே மேம்பாலம்.
ரூ.20.96 கோடி மதிப்பீட்டில் ஒலக்கூர் பீடர் இரயில்வே மேம்பாலம்!
கடலூர்- சித்தூர் சாலையில் ரூ.22.63 கோடி மதிப்பீட்டில் திருவெண்ணைநல்லூர் பரிக்கல் இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே மேம்பாலம்.
பாண்டி- கிருஷ்ணகிரி சாலையில் ரூ.38.74 கோடி மதிப்பீட்டில் தண்டரை திருவண்ணாமலை இரயில் நிலையங்களுக்கிடையே இரயில்வே மேம்பாலம்.
பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் ரூ.48.48 கோடி மதிப்பீட்டில் பொள்ளாச்சி- கிணத்துக்கடவு இரயில் நிலையங்களுக்கிடையே இரயில்வே மேம்பாலம்.
பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் ரூ.37.00 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டிலிருந்து - சென்னை செல்லும் பாலப்பகுதிப் பணி, ரூ.24.80 கோடி மதிப்பீட்டில் சீனிவாச ராகவன் தெரு பாலப்பகுதிப் பணி, ரூ.60.13 கோடி மதிப்பீட்டில் சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் பாலப்பகுதிப் பணி முதலிய 29 இடங்களில் இரயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலங்களாகவும், கீழ்பாலங்களாகவும் அமைக்கப்பட்டு போக்குவரத்து இனிதாக நடைபெற வழிவகுத்துள்ளது திராவிட மாடல் அரசு.
நடை மேம்பாலம்
தாம்பரத்தில் ரூ.6.29 கோடி மதிப்பீட்டில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.4061.71 கோடியில் ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைப் பணிகள் ரூ.3.909.16 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுத் திட்டத்தின் கீழ் 88 சாலை மற்றும் 16 பாலப்பணிகளும், ரூ.152.55 கோடி மதிப்பீட்டில் காலமுறை புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலையில் 8 சாலைப்பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நம்ம சாலை செயலி
சாலைகளில் கண்டறியப்படும் பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் உதவியுடன் அறிந்து சரிசெய்திட நம்ம சாலை செயலி என்னும் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி வழியாகப் பொதுமக்கள் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க முடியும். அதன் மூலம் சாலைப் பகுதிகளில் ஏற்பட்ட பள்ளங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சரி செய்யப்படுகின்றன.
பொறியாளர்களுக்குப் பயிற்சிகள்
வளர்ந்து வரும் புதிய புதிய தொழில்நுட்பங்களைக் களத்தில் கடைப்பிடித்து சாலை - பாலப்பணிகள் சிறப்பாக நடைபெறப் பொறியாளர்களுக்கும். இதர அலுவலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 379 பொறியாளர்களுக்கும், 112 தொழில்நுட்பம் சாரா அலுவலர்களுக்கும், விரிவான பயிற்சித் திட்டத்தின் (CTP) கீழ் 2,881 பொறியாளர்களுக்கும், மற்றும் 832 தொழில்நுட்பம் சாரா அலுவலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 368 பொறியாளர்களுக்கும், 40 மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர்களுக்கும். 41 துணை ஆட்சியர்கள் (பயிற்சி) மற்றும் தலைமைச் செயலகத்தின் 134 பதிவு அதிகாரிகளுக்கும் இப்பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்கள்
நாமக்கல், செங்கல்பட்டு, நீலகிரி, தேனி, மதுரை, தூத்துக்குடி சிவகங்கை. ராமநாதபுரம், ஈரோடு, கோயம்புத்தூர் விருதுநகர் கரூர். திருப்பூர். திருவாரூர். நாகப்பட்டினம் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர் திண்டுக்கல். திருச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 22 மாவட்டங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன
454 சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். நெடுஞ்சாலைத் துறையின் சாலைப் பாதுகாப்புப் பொறியாளர்கள் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாலைப் போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு வளர்க்கப்பட்டுள்ளது.
919 புதிய பணி நியமனங்கள்
84 உதவிப்பொறியாளர்கள், 416 இளநிலை வரைதொழில் அலுவலர்கள் 182 உதவியாளர்கள். 3 தணிக்கை உதவியாளர்கள், 67 இளநிலை உதவியாளர்கள், 6 சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள் நிலை-3 மற்றும் 49 தட்டச்சர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவும். 4 உதவியாளர்கள் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் நேரடியாகவும், 3 உதவி வரைவாளர், 45 இளநிலை உதவியாளர்கள், 9 தட்டச்சர்கள், 15 பதிவுரு எழுத்தர் மற்றும் 36 அலுவலக உதவியாளர்கள் கருணை அடிப்படையிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆக 919பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நடைபெற்று வரும் முக்கியப் பணிகள்
கோயம்புத்தூர் மேற்குவட்டச்சாலை, மன்னார்குடி கட்டம்-1. அம்பாசமுத்திரம், திருச்செங்கோடு (I & II) பவானி (கட்டம் 1) நாமக்கல் (கட்டம் II & கட்டம் -III), பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை, அருப்புக் கோட்டை மேற்கு புறவழிச்சாலை, கமுதி சிவகங்கை கட்டம் I, உத்திரமேரூர், துறையூர் கட்டம் II, தாம்பரம் கிழக்குப் புறவழிச்சாலை (இரு பகுதிகள்) மற்றும் திருப்போரூர் / கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரூ.944.21 கோடி மதிப்பீட்டில் 812.8 கி.மீ நீளமுள்ள ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாகத் தரம் உயர்த்தும் பணிகள்
ரூ.331 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 373 சாலை பாதுகாப்புப் பணிகள்.
ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8,076 கோடி மதிப்பீட்டில் 2,264 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகள்
ரூ.694 கோடி மதிப்பில் 69 பாலம் / சிறுபாலப் பணிகள் ரூ.763.80 கோடி மதிப்பீட்டில் 134 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றும் பணிகள் ரூ.375.32 கோடி மதிப்பீட்டில் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் 32 உயர்மட்டப் பாலங்கள், ரூ.596.64 கோடி மதிப்பீட்டில் மாநில நிதி திட்டத்தின் கீழ் 19 உயர்மட்டப் பாலங்கள்.
ரூ.1791.23 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூரில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிப்பாளையம் வரை உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள்.
ரூ.621 கோடி மதிப்பீட்டில் சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிகள் ரூ.25.52 கோடி மதிப்பீட்டில் படப்பையில் சாலை மேம்பாலம் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் மதுரையில் கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை மேம்பாலம். ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் மதுரையில் மதுரை-தொண்டி சாலையில் சாலை மேம்பாலம்.
ரூ.2,105.49 கோடி மதிப்பீட்டில் 41 இரயில்வே மேம்பாலங்கள்/ இரயில்வே கீழ்பாலங்கள் கட்டும் பணிகள் ரூ.27.5 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் சந்திப்பில் "U" வடிவிலான மேம்பாலம் கட்டும் பணிகள் என பல்வேறு முக்கிய பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.
ரூ.590.51 கோடியில் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டப் பணிகள்
ரூ.60.69 கோடி மதிப்பீட்டில் சென்னையில் சர்தார் படேல் சாலையுடன் ராஜீவ்காந்தி சாலை இணையும் மத்திய கைலாஷ் சந்திப்பில் சாலை மேம்பாலம்.
ரூ.314.48 கோடி மதிப்பீட்டில் மியாட் மருத்துவமனை முதல் முகலிவாக்கம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி மற்றும் ரூ45.50 கோடி மதிப்பீட்டில் மடிப்பாக்கம் அருகே வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி.
ரூ.30.67 கோடி மதிப்பீட்டில் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு, செந்தில் நகர் சந்திப்பு ஆகிய இடங்களில் 2 நடை மேம்பாலங்கள்.
ரூ.139.17 கோடி மதிப்பீட்டில் உள்வட்டச் சாலையிலுள்ள இரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்தும் பணி முதலியன சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டப் பணிகளாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஆட்சியில் இத்தகைய பல சாலைத் திட்டங்கள், மேம்பாலப் பணிகளால் மற்ற துறைகளைப் போலவே இந்தியாவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையிலும் சிறந்த மாநிலம் என புதிய வரலாறு படைத்து வருகிறது.