தமிழ்நாடு

சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக 614 பேருந்து நிழற்குடைகளில் மின்விளக்குகள் - சென்னை மாநகராட்சி !

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இதுவரை 614 பேருந்து நிழற்குடைகளில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக 614 பேருந்து நிழற்குடைகளில் மின்விளக்குகள் - சென்னை மாநகராட்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து வழித்தட சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தீவிரத் தூய்மைப் பணிகளும், பேருந்து நிறுத்தங்கள் முழுவதுமாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், சுழற்சி முறையில் நீர்த்தெளித்து சுத்தமாக பராமரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மின்விளக்குகள் இல்லாத பேருந்து நிழற்குடைகளில் மின்விளக்குகள் அமைத்தல், தேவைப்படும் இடங்களில் கூடுதலாக மின்விளக்குகள் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து பயணியரின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 மண்டலங்களிலும் உள்ள பேருந்து வழித்தடங்களில் அமைந்துள்ள ஒவ்வொரு பேருந்து நிறுத்தங்களிலும் தலா இரண்டு எல்.இ.டி. மின் குழல் விளக்குகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக 614 பேருந்து நிழற்குடைகளில் மின்விளக்குகள் - சென்னை மாநகராட்சி !

இதன் முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பேருந்து வழித்தடங்களில் அமைந்துள்ள தெருவிளக்குகள் அருகில் உள்ள 685 பேருந்து நிறுத்தங்களில் சாலையோர மின்விளக்கு இணைப்புகளிலிருந்து பேருந்து நிறுத்தங்களில் தலா இரண்டு எல்.இ.டி. குழல் விளக்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 614 பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதரப் பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக சாலையோர விளக்குகள் அமையாத 353 பேருந்து நிறுத்தங்களில் புதிதாக மின் மீட்டருடன் மின் இணைப்புப் பெற்று மின் விளக்குகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளை ஜுலை மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டுதல், பராமரித்தல் மற்றும் ஒப்படைத்தல் (BOT) முறையில் பராமரிப்பில் உள்ள 637 நிழற்குடைகளுக்கும் BOT ஒப்பந்ததாரர்கள் மூலம் மின்விளக்குகள் அமைக்கப்படும். இதன் காரணமாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் மின்விளக்கு வசதி உள்ளிட்ட முழுமையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு நிறைந்த பேருந்து நிறுத்தமாக புதுப்பொலிவினைப் பெறும்.

banner

Related Stories

Related Stories