தமிழ்நாடு

“சென்னையில் 13 பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன!” : அமைச்சர் சேகர் பாபு தகவல்!

“வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் அனைத்தும் நிறைவேறும்போது, வட சென்னை மக்களின் தேவைகள் ஓரளவுக்கு நிறைவுபெற்றிருக்கும்.”

“சென்னையில் 13 பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன!” : அமைச்சர் சேகர் பாபு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சரும், பெருநகர வளர்ச்சி குழுவ தலைவருமான பி.கே சேகர்பாபு கள ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 13 பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாமல்லபுரம், செங்கல்பட்டு, ஆவடி மற்றும் தீநகர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்படுத்தப்பட்டு வரும் பேருந்து நிலையங்கள், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முத்திரைகளாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

“சென்னையில் 13 பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன!” : அமைச்சர் சேகர் பாபு தகவல்!

பெரியார் நகர் மற்றும் திருவிக நகர் பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, ஜூலை இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ஏழை எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் பெற மருத்துவ மையம் திட்டமிடப்பட்டு, துறைமுகம் மற்றும் கொளத்தூரில் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் அனைத்தும் நிறைவேறும்போது, வட சென்னை மக்களின் தேவைகள் ஓரளவுக்கு நிறைவுபெற்றிருக்கும். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பணிகள் தீவிர படுத்தப்பட்டு இருக்கிறது” என்றார்.

banner

Related Stories

Related Stories