தமிழ்நாடு

தொலைதூரக் கல்வியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! : சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!

http://online.ideunom.ac.in என்ற இணையத்தளம் வாயிலாக இன்று முதல் தொலைதூரக் கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

தொலைதூரக் கல்வியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! : சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சென்னை பல்கலைக்கழக பதிவாளர்.

சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் இளங்கலை, முதுகலை, பட்டயம் சான்றிதழ் மற்றும் முதுகலை வணிக நிர்வாகவியல், முதுகலை கணினி பயன்பாடுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், http://online.ideunom.ac.in என்ற இணையத்தளம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தொலைதூரக் கல்வியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! : சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!

தொலைதூரக் கல்வி நிறுவனத்திலுள்ள ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் வழியே மாணவர்கள் சேரலாம் என்றும் இந்த மையம் சனி, ஞாயிறு உள்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் (அரசு பொது விடுமுறை தவிர) செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ideunom.ac.in) அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories