தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக 2024 - 25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2024-25 ஆம் ஆண்டில் 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சியாகும்.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இராணிப்பேட்டை சிப்காட்டில் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.175 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள காற்று பிரித்தெடுப்பு ஆலையை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.
2019 ஆம் ஆண்டு கலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது 100 கோடி முதலீடு மற்றும் 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது 200 கோடிக்கு முதலீடு என்ற வகையில் இந்நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் காற்று பிரித்தெடுக்கும் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.