தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதல்முறை : AI ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் !

இந்தியாவிலேயே முதல்முறை : AI ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots SE) நிறுவனம், 300 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், இந்த ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகதிறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

இந்தியாவிலேயே முதல்முறை : AI ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் !

அப்போது, "இந்த நிறுவனம் மூலமாக முதல் கட்டமாக 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை தொடங்கி இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தமிழ்நாடு அரசு சிறந்த முறையில் வழிக்காட்டுதல்கள் வழங்கியுள்ளது. தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தனால் மேலும் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது"என்று கூறினர்.

banner

Related Stories

Related Stories