தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு சார்பில் 3 நாட்கள் சூரிய சக்தி நிறுவல் பயிற்சி... எங்கு? எப்போது? - விவரம் உள்ளே!

தமிழ்நாடு அரசு சார்பில் 3 நாட்கள் சூரிய சக்தி நிறுவல் பயிற்சி... எங்கு? எப்போது? - விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்  சூரிய சக்தி நிறுவல் பயிற்சி  வரும் 18.06.2025 முதல் 20.06.2025  தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் சூரிய சக்தி துறையில் தொழில்முனைவோரின் அடிப்படைகள், சூரிய சக்தி துறையில் தொழில்முனைவோரின் அடிப்படைகள், சூரிய சக்தி மென்பொருள் கண்ணோட்டம், சூரிய சக்தி அடிப்படைகள் அறிமுகம், அடிப்படை சூரிய சக்தி திட்ட வடிவமைப்பு, நிதி திட்டமிடல், ஒழுங்குமுறைகள் மற்றும் மானியத் திட்டங்கள், சூரிய வணிக மேம்பாடு, AMC & விற்பனைக்குப் பிந்தைய சேவைகள், வணிக விளம்பரப் பயிற்சி, சூரிய PVக்கான வணிக மாதிரிகளைப் புரிந்துகொள்வது, நிதி திட்டமிடல் போன்றவை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.  

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில்   (திங்கள் முதல் வெள்ளி வரை)   காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி  மற்றும்  தொலைபேசி / கைபேசி எண்கள்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை,  இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.  8668102600.

முன்பதிவு அவசியம்: 

அரசு சான்றிதழ் வழங்கப்படும்

banner

Related Stories

Related Stories