இந்திய வானிலை மையம் சார்பில் நிகழ்நேர தரவுகள் (IMD-AWS Reports) அன்றாடம் பொதுபயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டு வந்தது. இதன் மூலம் பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், தனியார் வானியல் ஆய்வாளர்கள் ஆகியோர் வானிலை தொடர்பான விவரங்களை அறிந்துவந்தனர்.
பேரிடர் களங்களில் இந்திய வானிலை மையத்தின் இந்த தரவுகளை பயன்படுத்தி தனியார் வானியல் ஆய்வாளர்கள் வெளியிட்ட கணிப்பு பல்வேறு சேதங்களை தவிர்க்க உதவியது. இந்த நிலையில், இந்திய வானிலை மையம் சார்பில் வெளியிடப்படும் நிகழ்நேர தரவுகளை (IMD-AWS Reports) பொதுபயன்பாட்டிலிருந்து நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வானிலை மையம் கடந்த மாதம் நிகழ்நேர தரவுகளை பொதுபயன்ப்பாட்டிலிருந்து முடக்கியது. இது குறித்து TI ல் விளக் கேட்டதற்கு நிகழ்நேர தரவுகள் (IMD-AWS Reports) இனி வானிலை துறை அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும் என்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என்றும் இந்திய வானிலை மையம் பதிலளித்துள்ளது.
இதன் மூலம் நிகழ்நேர மழை அளவு, மழையின் தீவிரம், வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றை தனியார் வானிலை ஆய்வாளர்கள் மட்டுமின்றி, அரசு அதிகாரிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என யாரும் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.