கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரி என்பவர் JEE ADVANCED 2025 தேர்வில் வெற்றி பெற்று, IIT-யில் உயர்கல்வி பயில தகுதிபெற்றுள்ளார். அவரது தந்தை கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
எனினும் மனம் தளராமல் படித்து தந்தையின் கனவை ராஜேஷ்வரி நனவாக்கியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ராஜேஷ்வரியின் உயர்கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பதிவில், "தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் #Salute!
அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் #IIT-க்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது #DravidianModel அரசு தொடர்ந்து உழைக்கும்"என்று கூறியுள்ளார்.