மு.க.ஸ்டாலின்

திராவிட மாடலில் 2 டைடல் மற்றும் 16 நியோ டைடல் பூங்காக்கள் திறப்பு! : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

“திராவிட மாடலில் 2 டைடல் பூங்காக்கள் மற்றும் 16 நியோ டைடல் பூங்காக்கள் உருவானது!”

திராவிட மாடலில்  2 டைடல் மற்றும் 16 நியோ டைடல் பூங்காக்கள் திறப்பு! : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் 2000-ஆம் ஆண்டு புரட்சியை ஏற்படுத்தும் வகையில், சென்னை, தரமணியில் தமிழ்நாட்டின் முதல் டைடல் பூங்காவை முத்தமிழறிஞர் கலைஞர் நிறுவி, திறந்து வைத்தார். இது மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மாபெரும் வளர்ச்சி பெற வித்திட்டது.

அதன் தொடர்ச்சியாகவும் முத்தமிழறிஞரின் வழித்தோன்றலாகவும் இன்று செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் விதமாக, மதுரை மாநகரில் 314 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.34 இலட்சம் சதுரடி கட்டுமான பரப்பளவுடனும், திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.58 இலட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவுடனும் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 18.02.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்றைய நாள் (மார்ச் 11) மட்டும் கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் புதிய நியோ டைடல் பூங்காக்கள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

திராவிட மாடலில்  2 டைடல் மற்றும் 16 நியோ டைடல் பூங்காக்கள் திறப்பு! : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இந்நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,

“திராவிட மாடலில் உருவான 2 டைடல் பூங்காக்கள் மற்றும் 16 நியோ டைடல் பூங்காக்கள்!

கணினித் துறையில் தமிழ்நாடு உயர்ந்திடத் தலைவர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் உருவானவை டைடல் பூங்காக்கள்.

கடந்த 2016-21 அ.தி.மு.க. ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஒரே ஒரு டைடல் பூங்காவுக்கு மட்டுமே அடிக்கல் நாட்டினர்.

நமது திராவிட மாடல் ஆட்சியில், அவர்கள் அடிக்கல் நாட்டிய பட்டாபிராம் டைடல் பூங்காவை விரைந்து முடித்துத் திறந்தது மட்டுமல்ல,

விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில், சுமார் 4,200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நியோ டைடல் பூங்காக்களை நிறுவித் திறந்து வைத்துள்ளோம்.

இதுமட்டுமின்றி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில், சுமார் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் டைடல் பூங்காக்களும், திருவண்ணாமலை, இராசிபுரம், நாகர்கோயில், திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஒன்பது இடங்களில், சுமார் 5,400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நியோ டைடல் பூங்காக்களும் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும் - அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்! மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம்! வெல்வோம் ஒன்றாக!”

banner

Related Stories

Related Stories