தமிழ்நாடு

மகளிர் விடியல் பயணம் : MTC பேருந்துகளில் 139 கோடி முறை பயணம் செய்த மகளிர்... விவரம் உள்ளே !

மகளிர் விடியல் பயணம் : MTC பேருந்துகளில் 139 கோடி முறை பயணம் செய்த மகளிர்... விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்டதும் பெண்களது வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் விடியல் பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் அமல்படுத்தியதை அடுத்து பெண்கள் இலவசமாக மகிழ்ச்சியாக பேருந்துகளில் சென்று வருகிறார்கள். இத்திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து சாதாரண கட்டண பேருந்துகளில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மகளிர் விடியல் பயணம் : MTC பேருந்துகளில் 139 கோடி முறை பயணம் செய்த மகளிர்... விவரம் உள்ளே !

அந்த வகையில் மாநகர் போக்குவரத்துக்கு கழக பேருந்துகளில் 31.05.2025 வரை 139 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் விடியல் பயண பேருந்துகளில் பயணிக்கும் மகளிர் பயணிகளின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து வருகிறது.

சென்ற வருடம் மே மாதத்தில் சராசரியாக நாள் ஒன்றிற்கு 9.54 லட்சமாக இருந்த மகளிர் பயணம் இந்த வருடம் மே மாதத்தில் மேலும் 21% அதிகரித்து தற்போது நாள் ஒன்றிற்கு 12.06 லட்சம் மகளிர் பயணம் செய்து பயனடைந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories