தமிழ்நாடு

பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார் : திரையுலகம் அஞ்சலி!

பிரபல நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார் : திரையுலகம் அஞ்சலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருந்து வந்த பிரபல நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

’அவள் ஒரு தொடர் கதை’ திரைப்படத்தின் மூலம் 1974 ஆம் ஆண்டு திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதன் பிறகு கன்னிப்பருவத்திலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அந்த ஏழு நாட்கள், சிட்டிசன், ரமணா, விருமாண்டி, தர்மதுரை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படிக்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ், மலையாளம் என 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பணியாற்றி இருக்கிறார்.

அதோடு, ’டும் டும் டும்','மஜா', 'உள்ளம் கேட்குமே','பொய் சொல்லப் போறோம்' உள்ளிட்ட படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். சினிமா மட்டுமல்லாது, எழுத்தாளராகவும் இலக்கிய உலகத்தில் பிரபலமானார். 9 பத்தகங்களை எழுதி இருக்கறார்.

இந்நிலையில் உடல்நிலை காரணமாக இன்று காலமானார். மறைந்த இவரது மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories