தமிழ்நாடு

”அனைத்து மாநிலங்களின் குரலாக ஒலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : The Hindu தலையங்கம்!

அனைத்து மாநிலங்களின் குரலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் ஒலித்துள்ளது.

”அனைத்து மாநிலங்களின் குரலாக ஒலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : The Hindu தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, நிதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் குரலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கை ஒலித்துள்ளதாக, The Hindu ஆங்கில நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது.

மேலும் இந்த தலையங்கத்தில், பிரதமர் மோடி தலைமையில், மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்ட நிதி ஆயோக்கின் 10 வது நிதி நிர்வாகக்குழுக் கூட்டம் கடந்த 24 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அப்போது, நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி செலுத்துவதற்கு, அனைத்து மாநிலங்களும் ஒன்றிய அரசுடன் ஒன்றிணைந்த இந்தியாவாக செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி பேசியது நல்ல உணர்வு, ஆனால், யதார்த்த நிலையை பொய்யாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவு என்பது ஒருவழிப்பாதையாக உள்ளதாகவும், ஒன்றிய அரசு, தனது விருப்பங்களுக்கு மாநில அரசுகளை இணங்க வைக்க சில தந்திரங்களை பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், நிதி ஆயோக் நிர்வாகக் குழு மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் ஆகிய அமைப்புகள் அடிக்கடி ஆலோசனை கூட்டங்கள் நடத்தாததால், மாநிலங்கள் தங்கள் தீவிரமான பிரச்சினைகள் மற்றும் குறைகளை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க முடியாத நிலை உள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சியை முன்னுரிமையை கொண்ட அமைப்புகள், ஆண்டுக்கு ஒரு முறை கூடுவது போதுமானதாக இருக்காது, காலாண்டுக்கு ஒருமுறை கூடுவதே நல்ல பயனைத் தரும் என்றும் தி இந்து தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக், மற்றும் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைப்புகள் எப்போதாவது கூடும்போது, தேசிய அளவில், ஒருங்கிணைந்து செயல்படும் முறையை விட, தங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை பேசவே மாநிலங்கள் கவனம் செலுத்துகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அண்மையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 10 வது நிர்வாகக் குழு கூட்டத்தில், ஒன்றிய அரசு தமது வரி வருவாயில், 50 சதவீதத்தை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து, பெரும்பாலான மாநிலங்களின் கருத்தாக உள்ளது என்றும் தி இந்து ஆங்கில நாளிதழ் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, ஜிஎஸ்டி பல மாநிலங்களின் வரிகளை உள்ளடக்கியதால், ஒன்றிய வரிகளில் அதிக பங்கிற்கான மாநிலங்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு தீவிரமாக பரிசீலிப்பது நியாயமானதாகத் தெரிகிறது என்றும் தி இந்து ஆங்கில நாளிதழ் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories