தமிழ்நாடு

சேலம் மூதாட்டியை கொலை செய்து செயின் திருட்டு: திருடனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த தமிழ்நாடு போலீசார்!

சேலம் மூதாட்டியை கொலை செய்து செயின் திருட்டு: திருடனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த தமிழ்நாடு போலீசார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சரஸ்வதி என்பவரை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த செயின் மற்றும் தோடு ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் மூதாட்டி சரஸ்வதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து ஓமலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஓமலூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான நரேஷ்குமார் என்பது தெரியவந்தது.

சேலம் மூதாட்டியை கொலை செய்து செயின் திருட்டு: திருடனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த தமிழ்நாடு போலீசார்!

இதனை தொடர்ந்து நரேஷ் குமாரை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று காலை சங்ககிரி அருகே நரேஷ் குமார் இருப்பதாக கிடைத்த தகவலை அளித்து காவல்துறையினர் அங்கு சென்று அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையின் பிடியிலிருந்து தப்பி ஓடியதால் நரேஷ் குமாரை வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து சங்ககிரி அரசு மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிடிபட்ட நரேஷ் குமார் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நரேஷ் குமார் காவல்துறையின் பிடியில் சிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவரை துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் பிடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

banner

Related Stories

Related Stories