தமிழ்நாடு

”கேமரா முன் மட்டும் உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்?” : பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

கேமரா முன் மட்டும் உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுப்பியுள்ளார்.

”கேமரா முன் மட்டும் உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்?” : பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை, தங்களது அரசியல் பிரச்சாரத்திற்கு பா.ஜ.க பயன்படுத்தி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து விரிவான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் பிரதமர் மோடி, ராணுவத்தின் வெற்றியை தங்களது அரசியல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வருகிறார். பீகார் மாநிலத்தில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு பா.ஜ.க பயன்படுத்தி வருகிறது.

தற்போது ராஜஸ்தானில் நடந்த அரசு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ”பாரத தாயின் சேவகனாக இங்கே நான் தலை நிமிர்ந்து நிற்கிறேன். எனது மனம் குளிர்கிறது. ஆனால் ரத்தம் கொதிக்கிறது. நமது முப்படை வீரர்களும் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளன” என கூறியுள்ளார்.

இந்நிலையில் கேமரா முன் மட்டும் உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், முதலில் வெற்றுப் பேச்சை நிறுத்துங்கள். பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் நம்பியது ஏன்?,

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்?. கேமராக்கள் முன்னால் மட்டுமே உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்? இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பிரதமர் மோடி" என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories