தமிழ்நாடு

"இ-சேவை மையத்தில் சான்றிதழ் கேட்டு வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை" - அமைச்சர் KKSSR அறிவிப்பு !

சான்றிதழ் கேட்டு இ-சேவை மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

"இ-சேவை மையத்தில் சான்றிதழ் கேட்டு வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை" - அமைச்சர் KKSSR அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திட்டமிட்டபடி பள்ளிகள் வரும் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் , சான்றிதழ் கேட்டு இ-சேவை மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் உள்ள அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

"இ-சேவை மையத்தில் சான்றிதழ் கேட்டு வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை" - அமைச்சர் KKSSR அறிவிப்பு !

இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கலந்துகொண்டு 107 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட அரசாணை வழங்கினார். அதனை தொடர்ந்து அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்‌, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் சாதிச் சான்றிதழ் வருமானவரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என வருவாய்த்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சான்றிதழ் கேட்டு இ-சேவை மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories