தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளியை பாதுகாத்த அ.தி.மு.க : வெளியான அதிர்ச்சி தகவல்!

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் நாட்டையே உலுக்கிய பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளியை பாதுகாத்த அ.தி.மு.க : வெளியான அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த விவகாரத்தை கண்டும் காணாமல் இருந்து வந்தது. பின்னர் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தனர்.

ஏன் பொள்ளாச்சி பகுதியிலேயே திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்படியான அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாத அப்போதைய அதிமுக அரசு வேறுவழி இல்லாமல் வழக்கை பதிவு செய்தது.

பின்னர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சியை சேர்ந்த சபரி ராஜன் திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரண்பால், பாபு மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை போலிஸார் கைது செய்தனர். இதில் அருளானந்தம், பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளராக இருந்துள்ளார்.

இப்படி ஒரு கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கட்சியில் இருந்து உடனே நீக்காமல், 2 ஆண்டுகளாக அவரை கட்சியில் வைத்து அ.தி.மு.க பாதுகாத்து வந்துள்ளது. தற்போது இதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் 12-02-2019 அன்று முதல் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளராக இருந்த அருளாநந்தம் 6-01-2021 அன்றுதான் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக பாலியல் குற்றவாளியை அ.தி.மு.க பாதுகாத்து வந்துள்ளது இதன் மூலம் உண்மையாகியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories