தமிழ்நாடு

“மிரட்டல் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்” : அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி தொடர்ந்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

“மிரட்டல் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்” : அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி பா.ஜ.க. வழக்கறிஞர் ஜி.எஸ். மணி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்சநீதிமன்றம், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துங்கள் என்று மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தது. மேலும், ஒரு விவகாரம் அரசியல் சாசனத்துக்கு முரணாக உள்ளது என்றால் நீதிமன்- றம் விசாரணை நடத்தும் என்றும், இந்த விவகாரம் அடிப்படை உரிமையை மீறுவதாக இல்லை என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ் எந்தவொரு மாநிலத்தையும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்த நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும், தேசிய கல்விக் கொள்கை போன்ற ஒரு கொள்கையை ஏற்றுக்கொள்ள ஒரு மாநிலத்தை நேரடியாக கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில்,தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், “தேசிய கல்விக் கொள்கை 2020 போன்ற எந்தவொரு கொள்கையையும் ஏற்றுக் கொள்ள மாநிலங்களை நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியாது" என தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இக்கருத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் வழிநின்று வரவேற்கிறோம்.

அரசியலமைப்புச் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. எனவே, மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். நமது கல்வி நிதியை உடனே வழங்கிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories