தமிழ்நாடு

சென்னை சாந்தோம் சாலையில் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதி... போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு !

சென்னை சாந்தோம் சாலையில் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதி... போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வாகன நெரிசல் நேரத்தை தவிர்த்து (காலை 07.30 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை) மீதமுள்ள நேரங்களில் சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் லுக் சாலையில் இருவழிப் போக்குவரத்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. .

கார்ணீஸ்வரர் கோயில் தெரு, சாந்தோம் நெடுஞ்சாலையில் மெட்ரோ பணி காரணமாக, ஒருவழிப் பாதையாக (லூப் சாலை வழியாக) கடந்த ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சாந்தோம் நெடுஞ்சாலை & லூப் சாலையில் போக்குவரத்து சீரமைப்பு கார்ணீஸ்வரர் கோயில் தெரு, சாந்தோம் நெடுஞ்சாலையில் CMRL பணி காரணமாக, ஒருவழிப் போக்குவரத்து முறையானது (லூப் சாலை வழியாக) கடந்த ஆண்டு நடைமுறை படுத்தப்பட்டது.

சென்னை சாந்தோம் சாலையில் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதி... போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு !

தற்போது சாந்தோம் நெடுஞ்சாலையில் ஒரு பகுதி CMRL பணி முடிந்த நிலையில், நெரிசல் இல்லாத (Non-peak hours) நேரங்களில் இன்று முதல் சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் லூப் சாலையில் மீண்டும் இருவழிப் போக்குவரத்து நடைமுறை படுத்தபட உள்ளது.

நெரிசல் மிகுந்த நேரங்களில் (peak hours) (காலை 07.30 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை) அதிக போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் ஒருவழிப் போக்குவரத்து வழக்கம் போல் தொடரும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories