தமிழ்நாடு

”திராவிட மாடல் திட்டங்களால் தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ்நாடு” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!

2026-இல் 7 ஆவது முறையாக கழக ஆட்சியை அமைக்க உறுதியேற்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”திராவிட மாடல் திட்டங்களால் தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ்நாடு” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுபேற்று இன்றுடன் 4 ஆம் ஆண்டை நிறைவு செய்து 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நான்கு ஆண்டில், பெண்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை தீட்டி அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிவைத்து இருக்கிறது திராவிட மாடல் அரசு.

இந்த ஆட்சி கொண்டு வந்த விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் நாடுபோற்றும் திட்டங்களாக இருந்து வருகிறது. மேலும் தமிழ்நாடு 9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. அதேநேரம் இந்தியாவின் வளர்ச்சி 6.5 விழுக்காடுதான்.

இப்படி இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டை வழிநடத்தி சென்று கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் திராவிட மாடல் அரசின் நான்கு ஆண்டு சாதனைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து, வருகிறார்கள்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் தமிழ்நாடு நம்பர்-1 என தலைநிமிர்ந்து நிற்கிறது என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் வழியில் நடைபோட்டு, 4 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு. அறிவியலின் துணையோடு கொரோனாவை வென்றதில் தொடங்கி – பகுத்தறிவின் துணையோடு தமிழ்நாட்டைச் சூழ வரும் பிற்போக்கு நோய்களையும் வென்று கொண்டிருக்கிறார் நம் முதலமைச்சர் அவர்கள்!

நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் தமிழ்நாடு நம்பர்-1 என தலைநிமிர்ந்து நிற்கிறது. திராவிட மாடல் என்றால் சாதனை மாடல் ; ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்துக்கும் வழிகாட்டும் வளர்ச்சிக்கான மாடல் என்று வரலாறு நிச்சயம் சொல்லும்.

கழக அரசு 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.2026-இல் 7 ஆவது முறையாக கழக ஆட்சியை அமைக்க உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories