தமிழ்நாடு

”கிரிமினல் வேலையில் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” : நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் கிரிமினல் வேலையில் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

”கிரிமினல் வேலையில் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” : நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து, சதுரங்க ஆட்டத்தை ஆடிவருகிறது ஒன்றிய அரசு. இவர்களது கை அசைவுக்கு ஏற்ப ஆளுநர்களும், எதிர்க்கட்சி அரசுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கு பொறுப்பிற்கு வந்ததில் இருந்தே மாநில அரசுக்கு இடைஞ்சலாகவே இருந்து வருகிறார். மேலும் அரசின் செயல்பாடுகளில் நேரடியாக குறுக்கீடு செய்து வருகிறார். உச்சநீதிமன்றம் கூட பலமுறை ஆளுநரை கண்டித்துவிட்டது.

ஆனால் நான் திருந்த மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி பிடிவாதம் பிடித்து வருகிறார். அண்மையில் கூட உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார். இதில், அரசுக்கு எதிராகவும் பேசி வருகிறார்.

இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் கிரிமினல் வேலையில் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்து இருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ், "உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிய பிறகும் கூட, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்தி இருக்கிறார் ஆளுநர். இதில் இருந்தே நமக்கு தெளிவாக தெரிகிறது ஆளுநர் யாருடைய ஆள் என்று. பேச்சிலும், செயலிலுமே அவர் யார் என்பது நமக்கு தெரிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் கிரிமினல் வேலையில் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

என்னை நோக்கியும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவிவிடப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவும் சிக்கவில்லை. பா.ஜ.கவை எதிர்ப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்தால் குறைந்து போகட்டும். எனக்கு ஒரு நேர்மை இருக்கிறது. என்னை நான் விற்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories