தமிழ்நாடு

”முதலமைச்சரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்” : அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ் பேட்டி!

பால்வளத்துறை அமைச்சராக மீண்டும் மனோ தங்கராஜ் பதவியேற்றுள்ளார்.

”முதலமைச்சரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்” : அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் ராஜினாமா செய்ததை அடுத்து அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத்துறையும், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறையும், ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதிதுறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அதேபோல் பால்வளத்துறை அமைச்சராக இருந்த னோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவர் ஏற்கனவே இருந்த பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். அவர்களுக்கு பதவிப்பிரமாணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அமைச்சர் மனோ தங்கராஜ் வாழ்த்து பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்மனோ தங்கராஜ், ”மக்களுக்காக பணியாற்றும் ஒருவாய்ப்பை மீண்டும் எனக்கு முதலமைச்சர் வழங்கி இருக்கிறார். இந்த ஆட்சியில் பால்வளத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மீண்டும் எனக்கு பால்வளத்துறையை கொடுத்திருப்பது, முதலமைச்சர் எனக்கு கொடுத்த அங்கீகாரமாக கருதுகிறேன். முதலமைச்சரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக செயல்படுவேன்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories