தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான 9 அறிவிப்புகளை 110-விதியின் கீழ் வெளியிட்டார்.
அதன் விவரம் :
அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை 15 நாட்களில் சரண் செய்து அதற்குரிய பணப்பலனை பெறும் நடைமுறை இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது.
மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும்.
அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி பயில வழங்கப்படும் முன்பணம் தொழிற்கல்வி பயில 1 லட்ச ரூபாயும், கலை, அறிவியல், பாலிடெக்னிக் பயில 50 ஆயிரம் ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாட்டு அரசால் வழங்கப்படும் பரிசுத்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு தனது பரிந்துரைகளை வரும் செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்க உத்தரவு.
அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுமுறை காலத்தை அவர்களின் தகுதிகாண் பரவத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.