சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள தெற்கு இரயில்வேயின் தலைமை அலுவலகத்தில் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாலோசனை கூட்டமானது தெற்கு இரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி என்.வி.என்.சோமு, சசிகாந்த செந்தில், கதிர் ஆனந்த், கிரிராஜன், கா.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசியதாவது :
தெற்கு இரயில்வே சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெற்கு இரயில்வேயின் உறுப்பினர் குழு தலைவராக கதிர் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தென்னிந்திய இரயில்வே அலுவலர்களுக்கும் இடையே பாலமாக பணியாற்றுவார்.
இரயில்வே துறை சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள பிரச்னைகளை எழுப்பினர். இரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மிக குறைவான அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. இதனால் நிலுவையில் உள்ள வேலைகளை செய்ய தாமதம் ஆகிறது. 6 வந்தே பாரத் இரயில்களை மட்டும்தான் தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். வந்தே பாரத் இரயில் மற்றும் தெற்கு இரயில் உள்ளிட்ட அனைத்து இரயில்களிலும் வட மாநிலத்தைச் சேர்ந்த உணவுகளை மட்டுமே பரிமாறுகிறார்கள். நமது தமிழ் கலச்சார உணவுகளை வழங்குவதில்லை.
இரயில்வே ஓட்டுநர்களுக்கு கழிப்பறை இல்லை. அதனை ஏற்படுத்தி தரவேண்டும் என்று பல பிரச்சினைகளை குறித்து பேசியுள்ளோம். மேலும் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என கேட்டு இருக்கிறோம். அதற்கு அவர்கள் மழுப்பலான பதிலை சொன்னார்கள்.
சென்னையில் உள்ள இரயில் நிலையங்களில் மின்தூக்கி செயல்படாமல் பழுதாகி இருக்கிறது. இரயில் செல்லக்கூடிய வழித்தடத்தில் Compound wall இல்லாமல் இருக்கிறது. பொதுமக்கள் அதனை பொது வழியாக பயன்படுத்துகிறார்கள். அதனால் ஆபத்தான சூழல் நிலவுகிறது. வாணியம்பாடிக்கு யு டர்ன் மேம்பாலம் வேண்டுமென ஐந்து ஆண்டுகளாக கதிர் ஆனந்த் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு வேலை தொடங்குவோம் கூறியுள்ளனர்.
கொளத்தூரில் நான்காவது முனையம் அமைக்க வேண்டும் என கேட்டு இருக்கிறோம். திருவள்ளூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என கேட்டு இருக்கிறோம். தமிழகத்திற்கு வழங்கப்படக்கூடிய இரயில்வே திட்டங்கள் குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறோம். இரயில்வே துறை அமைச்சர் அதற்கு மலுப்பலான பதிலை தான் கொடுத்து வருகிறார்.
பாம்பன் பாலம் திறப்பின்போது ரூ.6000 கோடியை காட்டி பெருசா பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ஒரு பாஜக தலைவர் அது மோடி ஆகட்டும் அமித்ஷாவாகட்டும் யாராவது உண்மையை பேசி இருக்கிறார்களா? இல்லை பொய்களை மட்டுமே சொல்லி வருகிறார்கள்.
பாம்பன் பாலம் திறந்து வைத்தார்கள் தொடங்கி வைத்து விட்டுப் போனார்கள் முக்கா மணி நேரத்தில் பாலம் ஸ்ட்ரக் ஆகி போனது. பணம் கொடுத்து வெற்று விளம்பரத்தை பாஜக செய்து வருகிறது. பணம் பற்றாக்குறை சார்பாக வந்தே பாரத் இரயில்களில் உள்ள வழித்தடத்தில் மிருகங்கள் வரக்கூடாது என ஆராய்த்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு 6 வந்தே பாரத் இரயில்கள் போதுமானதாக இல்லை. ஆனால் வடமாநிலங்களில் 74 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.” என்றார்.
=> தொடர்ந்து இரயில்வே அலுவலகத்தில் இந்தி மொழியில் தமிழில் எழுதி இருந்தது குறித்தான கேள்விக்கு,
இந்தி மொழியில் எழுதி இருப்பது தொடர் பிரச்னையாக இருக்கிறது. இங்கு நடைபெற்ற கூட்டத்தில் 20 அலுவலர்களின் நான்கு பேர் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தயவுசெய்து சாப்பாடு கொடுப்பவர்கள் டிக்கெட் கொடுப்பவர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை வைத்து இருக்கிறோம். பரிசீலனை செய்கிறோம் என சொல்லி இருக்கிறார்கள்.
=> ஆளுநர் துணை வேந்தர் மாநாடு குறித்தான கேள்விக்கு,
உச்சநீதிமன்றம் கிட்டத்தட்ட குற்றம் செய்தவர் என்று வெளிப்படையாக சொன்ன பிறகும் உப்பு, மிளகாய் எல்லாம் சாப்பிடுபவராக இருந்தால் கண்டிப்பாக உரைக்கும். எதும் உரைக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது?.” என்றார்.