தமிழ்நாடு

”அதிமுகவின் ஒரே எண்ணம் இதுமட்டும்தான்” : வெளுத்து வாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டையே அடகு வைக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் ஒரே எண்ணமாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

”அதிமுகவின் ஒரே எண்ணம் இதுமட்டும்தான்” : வெளுத்து வாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.4.2025) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 418 கோடியே 15 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவிலான 6760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 390 கோடியே 74 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 7369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 357 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,02,531 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதில், "சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள் - பத்திரிகையிலும் படித்திருப்பீர்கள். விளிம்பு நிலை மக்களுக்கு நம்முடைய அரசு அதிகாரம் வழங்குகிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல், நேரடியாக உறுப்பினராக ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில்,

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடைய குரல் ஒலிக்கப் போகிறது.

இதுபோல, நம்முடைய ஆட்சியில் தன்னம்பிக்கையும் வளர்ந்திருக்கிறது! தமிழ்நாடும் வளர்ந்திருக்கிறது! இதைத்தான் சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை! ஆட்சியின் மேல் நியாயமாக எந்தக் குறையும் சொல்ல முடியாமல், இப்போது அவதூறு பரப்பிக் கொண்டு வருகிறார்கள். சட்டம் - ஒழுங்கு, அரசு நிர்வாகம் என்று அனைத்திலும், தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. அனைத்துத் தரவுகள், தரவரிசைகளிலும் தெளிவாக இன்றைக்கு நாம் அதை பார்க்கிறோம்.

ஆனால், தமிழ்நாட்டில் இருக்கின்ற சில எதிர்க்கட்சிகள், பொறுப்பான எதிர்க்கட்சிகளாக நடந்து கொள்ளாமல், தமிழ்நாட்டுக்கே எதிரிக்கட்சிகள் மாதிரி செயல்படுகிறார்கள். அவர்கள் எண்ணம் என்ன? தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கூட்டத்துடன் உறவாடி, தமிழ்நாட்டையே அடகு வைக்கவேண்டும். இதுதான் அந்த சந்தர்ப்பவாதிகளின் ஒரே எண்ணமாக இருக்கிறது! தி.மு.க.வை பொறுத்தவரைக்கும்

நீட் தேர்வை எதிர்ப்பதாக இருந்தாலும் -

மும்மொழித் திட்டத்தை நிராகரிப்பதாக இருந்தாலும் -

வக்ஃபு சட்டத்தை எதிர்ப்பதாக இருந்தாலும் -

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பாதிப்படைகின்ற மாநிலங்களை ஒன்று திரட்டுவதாக இருந்தாலும், நாம் தான் இந்திய அளவில் வலுவாக ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்! மாநில உரிமையின் அகில இந்திய முகமாக திமுகதான் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories