அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாளையொட்டி இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் அம்பேத்கர்,”ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. பழங்குடியின மக்களுக்கும், பட்டியலின மக்களுக்கும் ஒவ்வொரு வருடம் ஒதுக்கப்படும் நிதியானது அவர்களின் சமூக பொருளாதாரதை உயர்த்தும் விதமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு இந்தியாவின் பிற மாநிலங்களை விட குறிப்பிட்ட வகையில் மிகவும் சிறந்துள்ளது. புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. சமீபத்தில் இந்திய அரசு குற்றங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில் ஆணவக் கொலைகள் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்கள் விடவும் தமிழகத்தில் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.
பாஜகவினர் ஒடுக்கப்பட்டவர்களின் வளர்ச்சியை எதிர்பார்கள். அவர்கள் அம்பேத்கர் பெயரையும். பெரியார் பெயரையும் அவமரியாதை செய்வார்கள். அவர்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.
இவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.