தமிழ்நாடு

”RSS அமைப்பின் கொள்கை மிகவும் ஆபத்தானது” : CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை!

RSS அமைப்பின் கொள்கை மிகவும் ஆபத்தானது என சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

”RSS அமைப்பின் கொள்கை மிகவும் ஆபத்தானது” : CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

RSS அமைப்பின் கொள்கை மிகவும் ஆபத்தானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், ”RSS அமைப்பு சமூக சேவை அமைப்பு என பிரதமர் மோடி கூறியுள்ளது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை கொண்ட அமைப்பு RSS ஆகும்.

அதேபோல், நாட்டில் எந்த எதிர்க்கட்சிகளும், எதிர் கருத்துகளும் இருக்கக் கூடாது என தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை ஒன்றிய பா.ஜ.க அரசு சிதைத்து வருகிறது.

தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை கொடுக்காமல் தொடர்ச்சியாக ஒன்றிய பா.ஜ.க அரசு வஞ்சித்து வருகிறது. இந்த வஞ்சக போக்கை கண்டித்துத்தான் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. மக்களின் வரிப்பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்து விட்டு, மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories