தமிழ்நாடு

”சென்னையில் 12 துணை மின் நிலையம் அமைக்கப்படும்” : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

சென்னையில் 12 துணை மின் நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

”சென்னையில் 12 துணை மின் நிலையம் அமைக்கப்படும்” :  அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை, அடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்றில் இருந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், வினா - விடை நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்படி கல்வராயன் மலை வட்டாரத்தில் அமைந்துள்ள வெள்ளிமலையில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமான என சங்காரபுரம் உறுப்பினர் உதயசூரியன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,”கள்ளக்குறிச்சியில் 4 துணை மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் கள்ளக்குறிச்சியில் 1371 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளிமலையில் துணை மின் நிலையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து, முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் சென்னையில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 12 துணை மின் நிலையம் அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories