தமிழ்நாடு

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்!

டிசம்பர் மாதம் 10 முதல் 13ஆம் நாள் வரை நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

2024-ம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு மார்ச் 28-ஆம் நாள் வெளியான நிலையில், 90 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு ஜூலை 13-ஆம் நாள் நடத்தப்பட்டது. இத்தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர்.

1.59 லட்சம் பேர் எழுதிய முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் கடந்த செப்டம்பர் 2ஆம் நாள் வெளியானது. அதில் 1,988 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வுக்கு தகுதிபெற்றனர்.

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்!

இந்நிலையில், தகுதிபெற்ற தேர்வர்களுக்கு 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 முதல் 13ஆம் நாள் வரை முதன்மைத் தேர்வு நடைபெற்றது. அதற்கான முடிவுகளை நேற்று (மார்ச் 14) இரவு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இம்முடிவுகளில் சுமார் 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Physical Certificate Verification and Oral Test) வரும் ஏப்ரல் 7 முதல் 9 ஆம் நாள் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories