தமிழ்நாடு

வெளிநாடுகளுக்கு சுற்றுலா : விவசாயிகளுக்கு அசத்தலான அறிவிப்பு வெளியீடு!

உழவர்களை அயல்நாடுகளுக்கு கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா :  விவசாயிகளுக்கு அசத்தலான அறிவிப்பு வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.

இக்கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று 2025- 2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

1. இயற்கை வேளாண்மையைப் பரவலாக்கும் செய்திடும் விதமாக 37 மாவட்டங்களில் மொத்தம் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்.

2. தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 38,600 மாணவர்கள் உயிர்ம வேளாண் பண்ணைகளுக்கு ”கண்டுணர் சுற்றுலா” அழைத்து செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும.

3. ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு உழவர்களுக்கு 60 முதல் 70 % கூடுதல் மானியம் வழங்கப்படும். இதற்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு.

4. வேளாண்மையில் அதிக உற்பத்திக்கும், தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கும் மாநில அளிவில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். ரூ.55 லட்சம் ஒதுக்கீடு.

5. சிறந்த உழவர்களுக்கு நம்மாழ்வார் விருது ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படும்.

6. ஒரு லட்சம் உழவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த நீர்த் தேவையுள்ள பயிர்களை ஊக்குவித்திட மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம் ரூ.12 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படத்தப்படும்.

7. 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள், ரூ.15 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் புதியதாக நிறுவப்படும்.

8. பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம் ரூ.12 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

9. 35 லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்களைக் காப்பீடு செய்யும் வகையில் ரூ.841 கோடி நிதியில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

10. தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை வெளியிடப்படும்.

11. ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை நேரடியாக சென்று கண்டுணரும் வகையில் 100 விவசாயிகள் அயல்நாடுகளுக்கு கண்டுணர் சுற்றுலா அழைத்து செல்லப்படும். இதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

banner

Related Stories

Related Stories