தமிழ்நாடு

உழவர்களின் வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கை: 5-ஆவது வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

உழவர்களின் வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கை: 5-ஆவது வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.

இக்கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையில், மகளிர் நலன் காக்கும் திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள், புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவே ரயில் வேசை என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதிநிலை அறிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களும் வரவேற்பு அளித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று 2025- 2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வேளாண் துறைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories