தமிழ்நாடு

எல்லார்க்கும் எல்லாம் : தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை - பேரவையில் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்

எல்லார்க்கும் எல்லாம் : தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை - பேரவையில் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

இக்கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இவர் நிதியமைச்சராக பொறுப்பேற்று இரண்டாவது முறையாக தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வாசித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.

இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு நேற்று மாநில திட்டக்குழு தயாரித்த 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில் 2024-25 இல் 8% அல்லது அதற்கு மேல் வளர்ச்சியை தமிழ்நாடு தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலன்களுக்கும் பல தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கியதில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் அரசு முதன் முதலாக ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’- வெளியிட்டு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories