தமிழ்நாடு

"இளையராஜாவின் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்" - முதலமைச்சர் அறிவிப்பு !

இளையராஜா அவர்களின் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

"இளையராஜாவின் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்" - முதலமைச்சர் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இளையராஜா எழுதிய சிம்போனிக்கு வேலியன்ட் என பெயரிடப்பட்டது. இது லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் அரங்கேற்றப்பட்டது. ராயல் பிலோர்மோனிக் இசைக்குழுவுடன் சேர்ந்து அரங்கேற்றம் செய்யப்பட்ட இளையராஜாவின் வேலியண்ட் சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இதன் மூலம் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் மற்றும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் எனும் சாதனையை இசைஞானி இளையராஜா படைத்துள்ளார். லண்டனில் சிம்போனி இசையை அரங்கேற்றம் செய்த பிறகு சென்னை வந்த இசைஞானி இளையராஜாவை தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

முன்னதாக சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் செல்வதற்கு முன்னர் இளையராஜாவின் இல்லத்துக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனிடையே இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமக்கு வாழ்த்து தெரிவித்ததாக நன்றி தெரிவித்தார் இசைஞானி இளையராஜா.

அதனைத் தொடர்ந்து இதனை குறிப்பிட்டு, இளையராஜா அவர்களின் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பதிவில், "இலண்டன் மாநகரில் Symphony சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!

ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்! " என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories