ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு, ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி அடிமையாக இருந்து வருகிறது அ.தி.மு.க. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பேசாமல், வாய்மூடி கிடக்கிறார்கள். இப்போது கூட தங்களது எஜமானவர்கள் பா.ஜ.கவிற்கு விசுவாசமாகவே அதிமுக இருந்து வருகிறது.
இந்நிலையில், அ.தி.மு.கவிற்கும், ஜெயக்குமாருக்கும் சுயமரியாதை என்பது அறவே பிடிக்காது ஒன்று என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு," பா.ஜ.கவிற்கு முழுமையாக அடமானம் வைத்த அதிமுக ஒன்றிய அரசுக்கு லாவணி பாடுவதையே வழக்கமாக கொண்டுள்ளது. அதிமுகவிற்கும் ஜெயகுமாருக்கும் சுயமரியாதை என்பது அறவே பிடிக்காத ஒன்று.
ஆனால் இவர்களை போல் அடிமைகள் அல்ல நாங்கள். ஒன்றிய அரசுக்கு சிம்ம சொப்பனமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். திராவிட மாடல் அரசின் துணிச்சலான நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.