தமிழ்நாடு

“எப்ப புயல் மழை வந்தாலும் முதல் ஆளாக பணிகளை மேற்கொள்வது மீனவ மக்கள்தான்” - துணை முதலமைச்சர் புகழாரம்!

“எப்ப புயல் மழை வந்தாலும் முதல் ஆளாக பணிகளை மேற்கொள்வது மீனவ மக்கள்தான்” - துணை முதலமைச்சர் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தி.மு.க சென்னை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ஈஞ்சம்பாக்கம் கடலில் நடைபெற்ற, நைனார் குப்பம் முதல் ஊரூர் வரை உள்ள 13 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர் குழுவினர் பங்கேற்ற படகு போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (9.3.2025) நடுக்கடலுக்கு சென்று கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் படகு போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மீனவர்களுக்கு இயந்திர படகு, படகு, மீன்வலை உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை 

முதலில் போட்டிகளில் வென்ற மூன்றாம் பரிசு பெற்ற ஈஞ்சம்பாக்கம் குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, இமானுவேல் அவர்களுக்கும், இரண்டாம் பரிசு வென்ற  ஈஞ்சம்பாக்கம் குப்பத்தை சேர்ந்த சகோதரர் வீரன், மோகன் அவர்களுக்கும், முதல் பரிசை தட்டிச் சென்ற கொட்டிவாக்கம் குப்பத்தைச் சேர்ந்த சகோதரர் மோகன் கண்ணன் அவர்களுக்கும், இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். 

“எப்ப புயல் மழை வந்தாலும் முதல் ஆளாக பணிகளை மேற்கொள்வது மீனவ மக்கள்தான்” - துணை முதலமைச்சர் புகழாரம்!

நம்முடைய திராவிட மாடல் நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்டம் சார்பாக நடத்தப்படுகின்ற இந்த படகு போட்டியை தொடங்கி வைத்து  பரிசளித்து மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த பெருமை அடைகின்றேன். குறிப்பாக நைனார் குப்பம் முதல் ஊரூர் வரை உள்ள 13 மீனவ கிராமங்களைச் மீனவ பொதுமக்கள் உங்கள் அத்தனை பேரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு என்ன பரிசு வழங்கப் போகின்றீர்கள் என்று அண்ணன் மா.சு அவர்களிடம் விசாரித்தேன். முதல் பரிசாக இயந்திர படகு வழங்குவதாகவும், இரண்டாவது மூன்றாவது பரிசுகளாக படகு மற்றும் மீன் பிடி வலை தருவதாகவும் அண்ணன் அவர்கள் சொன்னார். ஆகவே மீனவர்களுக்கு என்ன பரிசு கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்களோ அந்தப் பரிசை தேர்ந்தெடுத்து அண்ணன் மா.சு அவர்கள் இங்கே வழங்கி இருக்கின்றார். 

அண்ணன் மா.சு அவர்களை பொறுத்தவரை என்னிடத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேதி வாங்க மாட்டார். மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சி அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சி என்றுதான் தேதி வாங்குவார். ஆனால் அப்படி வாங்குகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் தனித்துவமாக மிகச் சிறப்பாக யூனிக்காக இருக்கும். அதை நான் தவிர்க்கவும் முடியாது. அண்ணன் மா.சு அவர்கள் பேசும்போது இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்  கருணா அவர்களின் பெருமையைப் பற்றி எவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார் என்றெல்லாம் பேசினார்.  அவர் ஒன்றை மட்டும் குறிப்பிட தவறிவிட்டார். அந்த விவரத்தை நான் வரும்பொழுது என்னிடத்தில் சொன்னார். உள்ளாட்சித் தேர்தலில் கருணா கவுன்சிலர் சீட்டு கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள்.  பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு சீட்டு கொடுக்க முடியல. வேற ஒருத்தரை வேட்பாளராக திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து அறிவிச்சிட்டாங்க. இருந்தாலும் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்தான் கருணா அவர்களின் துணைவியார். அந்த அளவிற்கு இங்கே மக்கள் செல்வாக்கை பெற்றவர்.  இருந்தாலும் ஜெயிச்ச மறு நிமிடமே எந்த காலத்திலும் நான் திமுக தான் என்று கழகத்தில் இணைத்துக் கொண்டவர்தான் அண்ணன் கருணா அவர்களும் அவருடைய மனைவி அவர்களும். அவர்களுக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

“எப்ப புயல் மழை வந்தாலும் முதல் ஆளாக பணிகளை மேற்கொள்வது மீனவ மக்கள்தான்” - துணை முதலமைச்சர் புகழாரம்!

என்னிடத்தில் மா.சு அண்ணன் சொன்னது போல ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சி முடிந்து விடும். நீங்கள் காலை 10.15 மணிக்கு வருகை தந்தால் 11.15 மணிக்கு உங்களை அனுப்பி விடுகின்றேன் என்று சொன்னார். அவர் சொன்னா வாக்கை வைத்து நான் 12.30 மணிக்கு இன்னொரு நிகழ்ச்சிக்கு வந்து விடுகிறேன் என்று இன்னொருவருக்கு வாக்குறுதி கொடுத்தேன். ஆனா இங்கு போட்டில் ஏறிய பிறகு தான் தெரிகின்றது, மோட்டார் போட்டில் போன எங்களுக்கே இவ்வளவு அசதியாக இருக்கிறது என்றால், படகு போட்டியில்  ஓட்டி வந்த அந்தப் போட்டியாளர்களுக்கு எல்லாம் எவ்வளவு அசதியாக இருந்திருப்பாங்க என்று. அதனால் தான் நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று நான் இருந்து அவர்களை சந்தித்து வாழ்த்து கூறி பரிசுகளை கொடுத்து விட்டு செல்கின்றேன் என்று. காலதாமதமாக ஆனாலும் அவர்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். 

அதேபோல அண்ணன் மதியழகன் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார். நான் இரண்டு நாட்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் சென்ற போது அங்கே மருதவஞ்சேரி என்ற பகுதியில் இருக்கக்கூடிய தாய்மார்கள் என்னிடம் அங்கு இருக்கக்கூடிய ஒரு டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். உடனடியாக தலைவரிடம் சொல்லி அந்த டாஸ்மாக் கடையை இழுத்து மூடினோம். அப்போது அங்கு இருந்த பெண்களிடம் சொன்னேன். உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் அதனை தீர்த்து வைக்கின்றேன். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மகளிர்க்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார். 

அதுமட்டுமல்ல அன்று காலையில் பழவனங்குடி என்ற கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழு சகோதரிகளை சந்தித்து, குழுக்கள் எப்படி செயல்படுகின்றன, குழுக்களுக்கு இன்னும் என்ன தேவைப்படுகின்றது இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்று அவர்களுடன் கலந்தாலோசனை செய்தேன். அங்கு வந்திருந்த ஐந்து சகோதரிகள் அவர்களுக்கு வீடு இல்லை. வீட்டுக்கு பட்டா இல்லை என்று கோரிக்கை வைத்தவுடன் முதலமைச்சரிடம் சொன்ன உடனேயே, முதலமைச்சர் அதற்கான உத்தரவு போட்டு, அன்று மாலையே சென்று ஐந்து சகோதரிகளுக்கும் அந்த பட்டாக்களை கொடுத்தேன்.  

திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய வீரன் நகர் என்ற பகுதியில் வசிக்கக்கூடிய 80 குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவர்கள் எங்கள் வீடுகள் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளது, எங்களுக்கு பட்டா கொடுக்க மாட்டேங்கிறாங்க என்று தெரிவித்தார்கள். இந்த இடத்திற்கு பட்டா கொடுக்க முடியாதுங்க, இங்கிருந்து வேற இடத்துக்கு போறீங்களா அரசு வேற இடம் கொடுக்கும் என்று சொன்னேன். அவர்கள் முடியாது இங்கதான் இருப்போம் என்று சொன்னார்கள். நான் உடனே முதலமைச்சர் அவர்களிடம்  கேட்டபோது, அவர்களுக்கு அங்கு பக்கத்திலேயே, 4, 5 கிலோமீட்டர் தூரத்தில் கொற்கை நகர் என்ற பகுதியில் இடம் கொடுங்கள். அங்கே அவர்களுக்கு வீட்டிற்க்கான பட்டா மட்டுமல்ல, வீடு கட்டுவதற்கு 5 லட்சம் நிதியும் ஒதுக்கி தாருங்கள் என்று சொன்னார். கோரிக்கை வைத்த 6 மணி நேரத்தில் நரிக்குறவர்கள் வீட்டுக்கே சென்று வீடுகளுக்கான பட்டாவையும், வீடு கட்டிக்கொள்வதற்கான நிதி உதவியும் அளித்தது தான் நம்முடைய திராவிட முன்னேற்ற கழக அரசு. அப்படி ஒவ்வொன்றையும் நமது முதலமைச்சர்கள் பார்த்து பார்த்து செய்து கொண்டு இருக்கிறார்கள். 

“எப்ப புயல் மழை வந்தாலும் முதல் ஆளாக பணிகளை மேற்கொள்வது மீனவ மக்கள்தான்” - துணை முதலமைச்சர் புகழாரம்!

நேற்று மகளிர் தினம். முதலமைச்சராக அவர்கள் உங்களுக்கெல்லாம் வாழ்த்து தெரிவித்திருந்தார். இன்னும் சொல்லப் போனால் இந்த ஆட்சியில் மார்ச் எட்டாம் தேதி மட்டுமே மகளிர் தினம் கிடையாது. இந்த ஆட்சி அமைந்துள்ள இருந்து ஒவ்வொரு நாளும் மகளிர் தினம் தான். அப்படி ஒவ்வொரு திட்டத்தையும் மகளிருக்காக பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். ஆட்சி அமைந்த பிறகு முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான விடியல் பயணத்திட்டத்திற்கு தான். இதுவரை சுமார் 120 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு உள்ளார்கள். விடியல் பயணத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மகளிரும் கிட்டத்தட்ட 800 முதல் 900 ரூபாய் வரை சேமித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அது மட்டுமல்ல மகளிர் கல்லூரி சென்று படிக்க வேண்டும் என்று புதுமைப்பெண் திட்டம் மூலமாக அரசு பள்ளியில் படித்து எந்த கல்லூரியில் உயர்கல்வி சேர்ந்தாலும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குபவர் நமது முதலமைச்சர் அவர்கள். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம், இப்போது பல மாநிலங்களிலும் தொடங்க ஆரம்பித்து இருக்காங்க, அதுதான் முதலமைச்சருடைய காலை உணவு திட்டம். வேலைக்கு போகின்ற பெற்றோர் தங்கள் குழந்தை வெறும் வயிற்றுடன் ஸ்கூலுக்கு போய் இருக்கானே என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். இன்றைக்கு பெற்றோர்கள் குறிப்பா தாய்மார்கள் குழந்தைகளை மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு அனுப்புகின்றார்கள். என்னுடைய குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு திராவிட மாடல் அரசு இருக்கின்றது என்ற நம்பிக்கையோடு அனுப்புகின்றார்கள். குழந்தைகள் பள்ளிக்கு வந்தால் முதலில் தரமான காலை உணவு, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் கிட்டத்தட்ட 21 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் முதலமைச்சருடைய கலைஞர் மகளிர் உரிமை திட்டம். கடந்த 18 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் இந்த திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.  

அதேபோல நம்முடைய மீனவர்களுக்கு கழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. மீனவர்கள் நல வாரிய உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடையும்போது அவர்களுடைய குடும்பத்தினருக்கு 15 ஆயிரம் ரூபாய் என்பதை நம்முடைய முதலமைச்சர் தான் 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கி வருகிறார்கள். அதேபோல மீன் பிடி படகுகளுக்கு உரிமை வழங்கும் காலத்தை ஒரு வருடம் என இருந்ததை மூன்று வருடமாக உயர்த்தினார்கள். அதேபோல மீன்வள பல்கலை கழகத்தில் மீனவ மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தினார். 

“எப்ப புயல் மழை வந்தாலும் முதல் ஆளாக பணிகளை மேற்கொள்வது மீனவ மக்கள்தான்” - துணை முதலமைச்சர் புகழாரம்!

சென்ற 2023 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் மிகப்பெரிய மீனவர் மாநாட்டை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நடத்திக் காட்டினார். அந்த மாநாட்டில் மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மீன்பிடி தடை காலத்திற்கான நிவாரணத்தை ரூபாய் 5 ஆயிரத்தில் இருந்து 8000 ஆக உயர்த்தி கொடுத்தார். நாட்டுப் படகுகளுக்கு வழங்குகின்ற மானிய விலை எரிபொருள் அளவை ஆண்டிற்கு 3400 லிட்டரில் இருந்து, ஆண்டிற்கு 3700 ஆக உயர்த்தி கொடுத்தது நம்முடைய திராவிட மடல் அரசு. 

மீனவ மக்களை சந்திக்கும் போது எனக்கு தனி உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும். அதுதான் இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க எப்ப புயல் மழை வந்தாலும் மக்களுக்காக முதல் ஆளாக தெருவுக்கு வந்து பணிகளை மேற்கொள்வது மீனவ மக்கள்தான். 2023 இல் வந்த மிக்ஜாம் புயல் நேரத்திலும் சரி, சென்ற ஆண்டு வந்த பெஞ்சல் புயல் நேரத்திலும் சரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் கேட்காமலேயே கரத்தை நீட்டுவது மீனவ மக்களாகிய நீங்கள் தான். மீனவ மக்களே சந்திக்கும்போது நான் ஒரு விஷயத்தை சொல்வேன். எனக்கு பொதுவாக கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனா இன்னொருவருடைய உயிரை காப்பாற்றுகின்ற மனது வைத்துள்ள மீனவர்கள் நீங்கள் தான் உண்மையான வாழும் கடவுள்கள். நம்முடைய மீனவ மக்களுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்றும் துணை நிற்பார். 

அதேபோல நீங்களும் நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு துணை நிற்பீர்கள் என்று நம்புகின்றேன். 2023 ல் மிக்ஜாம் புயல் அடித்த நேரத்தில் கூட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இங்கே வந்து உங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரண பொருட்கள் எல்லாம் வழங்கினார். உங்களுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருந்தார். 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2026 இல் ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொல்லியுள்ளார்கள். குறைந்தது 200 தொகுதிகளை ஜெயிச்சு காட்டுவோம் என்று தலைவர் சொல்லியுள்ளார்கள். நம்முடைய திராவிட முன்னேற்ற கழக அரசு ஏழாவது முறையாக ஆட்சியில் அமர வேண்டுமென்றால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் அமர வேண்டும் என்றால்  உங்களுடைய பங்களிப்பு மிக மிக முக்கியம் என்பதை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மீனவ மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். 

banner

Related Stories

Related Stories