துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை - சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, மதுரை மாவட்டம் - சோழவந்தான், சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தலா ரூ.3 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள “முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தை” திறந்து வைத்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை மாவட்டம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளுடன் உடற்பயிற்சி கூடம், பார்வையாளர் இருக்கைகளுடன் ஹாக்கி ஆடுகளம், 400 மீ தடகள பாதை, 2 பாக்ஸ் கிரிக்கெட் மைதானம் அடங்கிய 'முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தை' திறந்து வைத்தார்.
மேலும் மதுரை மாவட்டம் சோழவந்தான், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தலா 3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள "முதலமைச்சர் சிறு விளையாட்டரங்களை" காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும் மதுரை மாவட்டம் - சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் ரூ. 3 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 200 மீ தடகள ஓடுபாதை, திறந்தவெளி கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி, கோ-கோ மைதானங்கள், நீளம் தாண்டுதல் பாதை, பார்வையாளர் மாடம்; சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் ரூ. 3 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 400 மீ தடகள ஓடுபாதை, திறந்தவெளி கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி, கோ-கோ ஆடுகளங்கள், நீளம் தாண்டுதல் பாதை, பார்வையாளர் மாடம்;
தூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதியில் ரூ. 3 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 400 மீ தடகள ஓடுபாதை, கால்பந்து மைதானம், கையுந்துபந்து ஆடுகளம், நீளம் தாண்டுதல் பாதை, பார்வையாளர் மாடம் அடங்கிய 'முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்களை' திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.