தமிழ்நாடு

”இதுதான் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்து செய்தி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?

இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளில் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

”இதுதான் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்து செய்தி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது இந்தி திணைப்பை எதிர்ப்போம்,மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.. அணணா வழியில் அயராது உழைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழங்கினார். பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய 105 ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு கோபாலபுரம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சிஐடி காலனிக்கு சென்று முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் மறைந்த முரசொலி செல்வம் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நேற்று நடைபெற்ற தனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் நான் பேசும்போது கூட, மாநிலத்தில் சுயாட்சி வேண்டும், இந்தி திணிப்பை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இரு மொழி கொள்கைதான் தமிழ்நாட்டில் தொடரும் என்பதுதான் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்து செய்தி.

நேற்று கட்சி தொடங்கியவர்கள் தி.மு.கவை பற்றி விமர்சிப்பது குறித்து எனக்கு கவலையில்லை. என்னுடைய கவலை எல்லாம் நாட்டைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் தான். மாநில உரிமையை நாம் பெற வேண்டும் என்பதை பற்றி தான் என்னுடைய கவலையுள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories