தமிழ்நாடு

”ஒன்றிய அரசின் ஆணவத்துக்கு போர்க்குணத்துடன் பதிலடி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!

அன்று குஜராத் முதலமைச்சராக இருக்கும் போது கேட்டவர்தான் நரேந்திரமோடி அவர்கள். அதைத்தான் இன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் கேட்கிறார்கள்.

”ஒன்றிய அரசின் ஆணவத்துக்கு போர்க்குணத்துடன் பதிலடி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (24-02-2025)

முதலமைச்சரின் போர்க்குரல்!

கல்விக்காக, பள்ளிக்குழந்தைகளுக்காக, ஆசிரியப் பெருமக்களுக்காக செலவு செய்யும் தொகையைத் தர முடியாது என்று ஆணவத்துடன் இருக்கிறது ஒன்றிய அரசு, இந்த ஆணவத்துக்கு போர்க்குணத்துடன் பதிலடி தந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

*பி.எம்.ஸ்ரீதி்ட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு 5 ஆயிரம் கோடி ரூபாய் இழக்கிறது என்று சொல்தும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே! தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கிக் கொண்டு இருக்கும் வரியைத் தர மாட்டோம்" என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும்... மறந்துவிடாதீர்கள்"என்று எச்சரிக்கை செய்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். இதுதான் ஒன்றிய பா.து.சு. அரசுக்கு புரியும் பாணியாகும். அதன்பிறகாவது இப்பிரச்சினையின் தீவிரத்தை புரிந்து கொள்வார்களா என்று தெரியவில்லை.

சமூகவலைத் தளங்களில் முதலமைச்சரின் போர்க்குரதுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது மட்டுமல்ல, அதன் நியாயத்தை பலரும் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். ஒருவர் சமூக வலைத்தளத்தில் பட்டியலையே பதிவு செய்திருந்தார்.

1. சுல்வி நிதி குறைப்பு

2. பட்டியல் பழங்குடியின மேம்பாட்டு நிதி நிறுத்தம்

3. இரயில்வே திட்டங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு

4. புயல் நிவாரண நிதி மறுப்பு

5. சாலை வளர்ச்சி திட்டங்களில் ஒதுக்கீடு குறைவு

6. மருத்துவமனை அமைக்கும் திட்டங்களில் தாமதம் (எ.கா: மதுரை எய்ம்ஸ்)

7. ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை காரணமாக தமிழ்மொழிக்கு ஆதரவு குறைவு

8. தேசிய திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு குறைங்க பங்கு

9. தொழில்துறை மானியம் குறைப்பு

10, சுற்றுச்சூழல் தொடர்பான நி ஓதுக்கீடு குறைவு

11, நகர்ப்புற மேம்பாட்டு நிதி குறைப்பு

12, கிராமப்புற வளர்ச்சி இட்டங்களில் குறைவான நிதி

13. நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் உதவி இல்லாமல் போனது

14. சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு குறைவு

15. தொழிலாளர்கள் நலத்திட்டங்களில் விதி குறைப்பு

16. தமிழகத்தில்ஒன்றிய அரசின் புதிய நிறுவனங்கள் ஏற்படுத்த மறுப்பு

17. இயற்கைப் பேரிடர் நிவாரண நிதி குறைப்பு

18, குடிநீர் வசதிக்கான நிதி குறைப்பு

19. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் மெதுவான செயல்பாடு

20. மாநில திட்டங்களுக்கு ஒன்றிய றிதி ஒதுக்கீட்டில் தாமதம்

21. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கான நிதி தாமதம்

”ஒன்றிய அரசின் ஆணவத்துக்கு போர்க்குணத்துடன் பதிலடி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!

22. தேசிய நிறுவனங்களின் தலைமையகம் தமிழ்நாட்டில் அமைக்க மறுப்பு

23. ஒன்றிய அரசின் தொழில் முனைவோர் ஊக்கத்திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு குறைவான ஆதரவு

24, தமிழ்நாட்டிற்கு சுடலோரப் பாது காப்பு இட்டங்களில் குறைந்த முக்கியத்துவம்

25. ஒன்றிய அரசின் விவசாய நிசி இட்டங்களில் தமிழ்நாட்டிற்குறி்கி குறைவு

26. தமிழ்நாட்டில் பாது காப்பு உற்பத்தி நிறுவனங்களை அமைக்காமல் தவிர்ப்பு

27. ஒன்றியறிகி ஆதரவுடன் நடைபெறும் குடிசைப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களில் குறைவு

28. தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான ஒன்றிய றிதி ஒதுக்கீடு தமிழ்நாட்டில் குறைவு

29. ஒன்றிய அரசு உதவியுடன் செயல்படும் திறன் மேம்பாட்டு இட்டங்களில் தமிழ்நாட்டிற்கு குறைவான பங்கு

30. மாநிலத்தில் ஒன்றிய கல்வி அமைப்புகள் அமைப்பதில் மேன்மை அடையாத நிலை

-என்று பட்டியலிட்டுள்ளார்.அவர். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எதையுமே செய்யாமல் தமிழ்நாட்டையும் உள்ளடக்கி ஆள்வதால் என்ன பயன்?

ஒருகாலத்தில் ஒருமாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி. மாநில முதலமைச்சராக இருந்த போது மாநில சுயாட்சிக்காகக் குரல் எழுப்பியவர்தான் நரேந்திரமோடி. ஆனால் இன்று அவர் அனைத்தையும் மறந்து சர்வாதிகாரத்தனத்துடன் செயல்பட்டு வருகிறார்.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆம் தேதியன்று பா.ஜ.சு. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்...

மறைமுக வரிவிதிப்பில் சீர்திருத்தம் செய்ய அனைத்து மாநில அரசு களுடனும் ஆலோசனை செய்வோம்.

மாநில முதல்வர்களையும் சமமாகக் கருதி - தேச நிர்மாணப் பூணி களில்ஈடுபடுத்துவோம்.

மாநில அரசுகளுக்கு அதிக அளவில் நிதி அதிகாரங்களை வழங்குவோம்.

மாநிலப் பிரச்சினைகளுக்கு தொடர்புடைய மாநிலங்களுக்கு இடையே கவுன்சில் அமைத்து தீர்வு காண்போம் - என்று சொல்லப்பட்டது. அதைச்செய்யுங்கள் என்றுதான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்கிறார்கள்.

"குஜராத் மக்கள் ரூ.60 ஆயிரம் கோடியை டெல்லிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் திரும்ப வருவது மிகக் குறைவு. குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா?” என்று 6.12.2822 அன்று குஜராத் முதலமைச்சராக இருக்கும் போது கேட்டவர்தான் நரேந்திரமோடி அவர்கள். அதைத்தான் இன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் கேட்கிறார்கள்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் பேச்சை கேட்க மறந்தாலும், மோடி பேச்சை மோடி கேட்பாரா?

banner

Related Stories

Related Stories