தமிழ்நாடு

வழக்கறிஞர் திருத்த மசோதா விவகாரம் : “தமிழ்நாடு வெறும் பெயர் அல்ல; எங்கள் அடையாளம்” - முதலமைச்சர்!

வழக்கறிஞர் திருத்த மசோதா விவகாரம் : “தமிழ்நாடு வெறும் பெயர் அல்ல; எங்கள் அடையாளம்” - முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு விரோதமான செயல்களை செய்து வருகிறது. மாநிலங்களையும் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக பலவித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. முன்பு விவசாயிகளுக்கு என்று மூன்று வேளாண் சட்டங்கள் என்று கொண்டு வந்த நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, அந்த மசோதாவை திரும்பப் பெற்றது ஒன்றிய அரசு.

தொடர்ந்து இஸ்லாமியர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக சிஏஏ, என்.ஆர்.சி., வக்ப் வாரிய திருத்த சட்டம் என்ற பல்வேறு மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு, தயாராகி வரும் நிலையில், தற்போது வழக்கறிஞர்களுக்கு எதிராகவும் ஒரு மசோதாவை கொண்டு வர முயன்றது.

வழக்கறிஞர் திருத்த மசோதா விவகாரம் : “தமிழ்நாடு வெறும் பெயர் அல்ல; எங்கள் அடையாளம்” - முதலமைச்சர்!

அதாவது தற்போது நடைமுறையில் இருக்கும், 1961-ம் ஆண்டின் வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய மசோதா தாக்கல் செய்ய, ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வரைவு சட்ட மசோதாவை, ஒன்றிய சட்டத்துறை மற்றும் நீதி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. வரைவு சட்ட மசோதா குறித்து வழக்கறிஞர் சங்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்க, வரும் 28-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு, இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு, வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. இந்த சூழலில் நேற்று இரவு இந்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருந்தது.

வழக்கறிஞர் திருத்த மசோதா விவகாரம் : “தமிழ்நாடு வெறும் பெயர் அல்ல; எங்கள் அடையாளம்” - முதலமைச்சர்!

இந்த நிலையில், வழக்கறிஞர் திருத்த மசோதாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :

“சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு” என்றார் பேரறிஞர் அண்ணா. வழக்கறிஞர்கள் திருத்த மசோதா - 2025 சட்டத்துறையினரின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதலாகும். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், ஒன்றிய பாஜக அரசு நீதித்துறையின் சுதந்திரத்தைத் திட்டமிட்டு சிதைத்து வருகிறது.

முதலில் நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களுக்கான கொலீஜியத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பு செய்யத் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (NJAC - National Judicial Appointments Commission) மூலம் நீதித்துறை நியமனங்களை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்போது, ​​பார் கவுன்சில்கள் மீது கட்டுப்பாட்டைக் கோருவதன் மூலம், சட்டத் தொழிலின் சுயாட்சியை அரிப்பதன் மூலம் நீதித்துறை சுதந்திரத்தைப் பலவீனப்படுத்துவதை ஒன்றிய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

வழக்கறிஞர் திருத்த மசோதா விவகாரம் : “தமிழ்நாடு வெறும் பெயர் அல்ல; எங்கள் அடையாளம்” - முதலமைச்சர்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவின்சிலில் பெயர் மெட்ராஸ் பார் கவுன்சில் என்று மறுபெயரிட விரும்புகிறது. தமிழ் மீதான பாஜகவின் வெறுப்பு மசோதாவில் தெளிவாக தெரிகிறது. தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல; அது எங்களின் அடையாளம். இந்த வரைவு மசோதாவிற்கு எழுந்த தன்னிச்சையான போராட்டங்களும், கடும் எதிர்ப்பும் ஒன்றிய அரசை அதைத் திரும்பப் பெறக் கட்டாயப்படுத்திய போதிலும், அது மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற வாதம் கண்டிக்கத்தக்கது.

இந்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கோருகிறது. மேலும் சட்டத் தொழிலின் சுயாட்சியை மதிக்க ஒன்றிய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறது."

banner

Related Stories

Related Stories